வேகமாக பரவுகிறது ஓமிக்ரான், ஆனால் பாதிப்பு குறைவாக இருக்கும்: தென்னாப்பிரிக்கா

பெரி­டோ­ரியா: புதிய உரு­மா­றிய ஓமிக்­ரான் தொற்று தென்­னாப்­பி­ரிக்­கா­வில் முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­விற்கு வேக­மாக பர­வு­வதா­க­ தென்­னாப்­பி­ரிக்க அதி­பர் சிரில் ராமபோசா கூறினார்.

ஆனால் மற்ற உரு­மா­றிய கிருமி ­க­ளைக் காட்­டி­லும் ஓமிக்ரானால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறை­வாக இருக்­கக்­கூடும் என்று முதற்­கட்ட ஆய்­வு­கள் காட்­டு­வ­தாகவும் அவர் தெரி­வித்­தார்.

மருத்­து­வர்­களும் சிகிச்­சைக்­காக மருத்­து­வ­ம­னைக்கு வரும் நோயா­ளி­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­ற­னர்.

இதற்­கி­டையே, தென்­னாப்­பி­ரிக்க மாண­வர்­க­ளுக்­குக் கிரு­மி ­தொற்­றி­வி­டுமோ என்ற அச்­சத்­தை­விட தேர்­வு­கள் நடை­பெ­று­ வதில் ஏதா­வது குள­று­படி ஏற்­பட்டு வி­டுமோ என்ற கவ­லை­தான் மேலோங்கி உள்­ளது.

பெரிடோரியாவில் உள்ள ‌ஷ்வானி தொழில்­நுட்ப பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயி­லும் கிட்­டத்­திட்ட 30 மாண­வர்­க­ளி­டம் ராய்ட்­டர்ஸ் ஊட­கம் நேர்­கா­ணல் நடத்­தி­யது. அப்­போது பெரும்­பா­லா­னோர் வகுப்­பு­கள் மீண்­டும் தடை­பட்டு விடுமோ என கவலை தெரி­வித்­த­னர்.

"மீண்­டும் இணைய வழி கல்வி என்­றால் மிக­வும் கடி­ன­மா­கி­

வி­டும். சில நேரங்­களில் இணைய இணைப்பு வேலை செய்­யாது," என்­றார் 21 வயது மாண­வர்.

இதற்­கி­டையே, பெரி­ய­வர்­

க­ளைப் போல் இளம் வய­தி­ன­ரும் மோச­மாக பாதிக்­கப்­ப­டு­வ­தாக தர­வு­கள் கூறு­கின்­றன.

அங்கு தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள இளம் வய­தி­னர் எண்­ணிக்கை மிக­வும் குறை­வா­கும். 18 முதல் 34 வய­துக்கு இடை­பட்­ட­வர்­க­ளில் ஐந்­தில் ஒரு பங்­கி­னர் மட்­டுமே தடுப்­பூசி போட்­டுக் ­கொண்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!