பேரழிவை ஏற்படுத்திய டோங்கா எரிமலை வெடிப்பு; தாமதமாகும் நிவாரண உதவிகள்

பேரழிவை ஏற்படுத்திய டோங்கா எரிமலை வெடிப்பு; தாமதமாகும் நிவாரண உதவிகள்

1 mins read
5010a5cc-020d-4d63-8f24-bb0492ca2f71
-

சிட்னி: கட­லுக்கு அடி­யில் ஏற்­பட்ட எரி­மலை வெடிப்பு, சுனா­மி­யால் டோங்கா தீவு பேர­ழி­வைச் சந்தித்துள்­ள­தாக அதன் தூதர் நேற்று சொன்­னார்.

எரி­ம­லை­யின் சாம்­பல் வான் அள­விற்­குப் பர­வி­யுள்­ள­தால், மீட்பு விமா­னங்­க­ளால் டோங்­கா­விற்கு செல்ல முடி­ய­வில்லை. இதை­ய­டுத்து, கப்­ப­லில் நிவார­ணப் பொருள்­களை அனுப்­பு­கிறது ஆஸ்­தி­ரே­லியா.

பேர­ழி­வால் உல­கி­ட­மி­ருந்து முற்றிலும் துண்­டிக்­கப்­பட்­டுள்ள டோங்­கா­வில் ஏற்­பட்­டி­ருக்­கக்­கூடிய உயி­ரி­ழப்­பு­கள் குறித்­தும் அச்­சம் எழுந்­துள்­ளது.

நியூ­சி­லாந்து பாது­காப்­புப் படை­யின் உளவு விமா­னங்­க­ளால் எடுக்­கப்­பட்ட படங்­கள் மாங்கோ தீவில் ஒரு முழு கிரா­ம­மும் அழிக்­கப்­பட்­ட­தை­யும் அரு­கி­லுள்ள அட்டாட்டா தீவில் பல கட்­ட­டங்­கள் காணா­மல் போன­தை­யும் காட்­டி­ய­தாக ஆஸ்­தி­ரே­லி­யா­வில் உள்ள டோங்­கா­வின் துணைத் தலை­வர் கர்­டிஸ் கூறி­னார்.

பலர் உயி­ரி­ழந்­தி­ருக்க வாய்ப்பு உள்­ள­து என்­றும் அவர் சொன்­னார்.

பிரிட்­ட­னைச் சேர்ந்த 50 வயது ஏஞ்­சலா குளோ­வர் உட்­பட இது­வரை இரு­வர் மாண்­டது உறு­திப்­படுத்­தப்­பட்­டுள்­ள­தாக டோங்கா போலி­சார் நியூ­சி­லாந்து தூத­ர­கத்­தி­டம் தெரி­வித்­த­னர்.

முக்கிய தீவான டோங்கடாபுவில் 50 வீடுகள் முற்றிலும் அழிந்துவிட்டதோடு, டோங்காவில் 100 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

டோங்கடாபுவில் உள்ள கட்டடங்களைக் கிட்டத்தட்ட 2 செ.மீ. உயரத்திற்குச் சாம்பல் மூடியுள்ளதாகவும் அது கூறியது. குடிநீரும் மாசடைந்திருக்கும் என்பதால் செஞ்சிலுவை சங்கம் தண்ணீர் அனுப்பியுள்ளது.