ஆப்பிரிக்காவின் டான்ஸானியா நாட்டில் உள்ள வனவிலங்குப் பூங்காவில் வரி இல்லாத வரிக்குதிரையின் காணொளி கண்டு இணையவாசிகள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.
கிட்டத்தட்ட நான்கு நட்களுக்கு முன்னர் செரெங்கபிட்டி தேசிய பூங்கா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெள்ளை நிறத்தில் உலவும, ஒரு இளம் வரிக்குதிரையின் காணொளி பதிவிடப்பட்டது.
அல்பினிசம் எனப்படும் வெண்மைத் தோல் நோய், குறைபாடுடைய அந்த வரிக்குதிரையின் கழுத்துப் பகுதியில் மட்டும் சில கருப்பு வரிகள் மென்மையாகத் தென்பட்டன.
இந்த 'அல்பினோ' வரிக்குதிரைக்கு வயது எட்டு மாதங்கள் என நம்பப்படுகிறது.