வடகொரியாவில் கிருமிப் பரவல் குறைந்துள்ளது

சோல்: வட­கொ­ரி­யா­வில் கிட்­டத்­தட்ட 10 நாள்­க­ளுக்­குப் பிறகு முதல்­மு­றை­யாக தொற்று அறி­கு­றி­யான காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 200,000த்திற்­கும் குறை­வாக பதி­வா­க­யுள்­ளது.

டகொ­ரி­யா­வில் கடந்த 12ஆம் தேதி முதல்­மு­றை­யாக கொவிட்-19 உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அத­னைத் தொடர்ந்து அங்கு முடக்­க­நிலை நடப்­பில் உள்­ளது.

நக­ரங்­க­ளுக்கு இடையே கடு­மை­யான பயண கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

ஆனா­லும் தினந்­தோ­றும் 2 லட்­சத்­துக்­கும் மேற்­பட்­டோ­ருக்­குத் தொற்று அறி­கு­றி­யான காய்ச்­சல் உள்­ளது கண்­ட­றி­யப்­பட்டு வந்­தது.

ஞாயிற்­றுக்­கி­ழமை நில­வ­ரப்­படி மேலும் 186,090 பேருக்கு தொற்று பர­வல் அறி­கு­றி­யான காய்ச்­சல் காணப்­பட்­டுள்­ள­தாக கேசி­என்ஏ ஊட­கச் செய்தி கூறு­கிறது.

ஆனால், அவர்­களில் எத்­தனை பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது என்­பது குறித்து எந்­தத் தக­வ­லும் இல்லை.

இது­வரை அங்கு 2.6 மில்­லி­யன் பேர் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­களில் 2 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் குண­ம­டைந்­து­விட்­ட­தா­க­வும் அச்­ச­செய்தி கூறு­கிறது.

இந்­நி­லை­யில் அர­சி­யல் விவ­கா­ரக்­குழு கூட்­டத்­தில் பேசிய நாட்­டின் தலை­வர் கிம் ஜோங் உன், கிரு­மிப் பர­வல் கட்­டுக்­குள் வரத்­தொ­டங்கி உள்­ள­தாக தெரி­வித்­தார்.

இதே போக்கு நீடிக்க கட்­டுப்­பா­டு­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வதைத் தீவி­ர­மாக கண்­கா­ணிக்­க­வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்.

கிரு­மிப் பர­வல் நிலை­மைக்­கேற்ப கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வ­தற்­கான திட்­டங்­க­ளைத் தீட்­டு­மா­றும் அவர் அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!