பிரிட்டிஷ், நார்வே தூதர்களுக்கு ஈரான் அழைப்பாணை

டெஹ்­ரான்: ஈரா­னில் ஆர்ப்­பாட்­டங்­கள் தொடர்­வ­தை­யொட்டி அது பிரிட்­டன், நார்வே நாடு­க­ளைச் சேர்ந்த தூதர்­க­ளுக்கு அழைப்­பாணை விடுத்­துள்­ளது. அந்த நாடு­க­ளின் ஊட­கங்­கள் தவ­றான கருத்து ஏற்­படும் வண்­ணம் ஆர்ப்­பாட்­டங்­க­ளைப் பற்­றித் தக­வல் வெளி­யி­டு­கின்­றன என்­பது ஈரா­னின் குற்­றச்­சாட்­டு­களில் ஒன்று.

ஆகக் கடைசி நிலவரப்படி ஆர்ப்­பாட்­டங்­களில் மாண்­டோ­ரின் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட இரட்­டிப்­பானது. சுமார் 35 பேர் மாண்­டதாக ஈரான் அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான தொலைக்­காட்சி ஒளி­வழி தெரி­வித்­தது.

மாண்­டோ­ரில் குறைந்­தது ஐந்து பாது­காப்பு அதி­கா­ரி­களும் அடங்­கு­வர். மேலும், ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களில் நூற்­றுக்­க­ணக்­கா­னோர் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­டிருந்த மஹ்சா அமினி எனும் பெண் மர­ண­ம­டைந்­த­தைத் தொடர்ந்து ஈரா­னின் பல முக்­கிய நக­ரங்­களில் கடந்த ஒரு வார­மாக ஆர்ப்­பாட்­டங்­கள் இடம்­பெற்று வந்­துள்­ளன. 22 வயது குரு­தி­யப் பெண்­ணான அவர் 'ஹிஜாப்' எனும் தலை­யங்­கியை சரி­யாக அணி­யா­த­தா­கச் சொல்­லப்­பட்­ட­தால் ஈரா­னின் நன்­ன­டத்தை காவல்­து­றை­யி­ன­ரால் கைது­செய்­யப்­பட்­டார். மூன்று நாள்­களுக்கு மயக்க நிலை­யில் இருந்த அவர் மர­ண­ம­டைந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!