வாழ்வில் ஏற்பட்ட தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய துர்கேஸ்வரி

பள்­ளித் தேர்­வு­களில் நல்ல மதிப்­பெண்­க­ளைப் பெற வேண்­டும் என்ற முனைப்­பு­டன் புக்­கிட் வியூ மாணவி துர்­கேஸ்­வரி கண்­ணன் எப்­போ­துமே தமது கல்­வி­யில் கண்­ணும் கருத்­து­மாக இருந்து படித்து வந்­தார். ஆனால் இறு­தி­யில் ஏமாற்­றம்­தான் மிஞ்­சி­யது.

அவர் எதிர்­பார்த்த முடி­வு­கள் அவ­ருக்­குக் கிடைக்­கா­மல் கடும் உழைப்­புக்கு ஏற்ற மதிப்­பெண்­கள் கிடைக்­க­வில்­லையே என்ற ஏக்­கம் அவ­ரைத் துன்­பு­றுத்­தி­யது.

இதன் கார­ண­மாக, நாள­டை­வில் அவ­ரது தன்­னம்­பிக்­கையை இது பாதித்­தது.

தமக்கு ஏற்­பட்ட இந்­தப் பாதிப்பு பற்றி துர்­கேஸ்­வரி யாரி­ட­மும் பகி­ர்ந்­து­கொள்­ள­வில்லை.

இது அவர் உயர்­நிலை இரண்­டாம் வகுப்­பில் பயின்­று­கொண்­டி­ருந்­த­போது தாழ்வு மனப்­பான்­மைக்கு வழி­விட்டு அவ்­வப்­போது பதற்­றத்­தை­யும் உண்­டாக்­கி­யது.

நிலைமை மோச­ம­டைய, பதற்­றம் கார­ண­மாக ஒரு­முறை அரை­யாண்டுத் தேர்­வுத்­தாள் ஒன்றை அவர் எழுத முடி­யா­மல் போய்­விட்­டது.

இந்­நி­லை­யில், துர்­கேஸ்­வரி உயர்­நிலை மூன்­றில் பயின்­று­கொண்­டி­ருந்­த­போது அவ­ரது வாழ்க்­கை­யில் திருப்­பு­முனை ஏற்­பட்­டது.

இதில் பள்ளி ஆலோ­ச­க­ரான திரு நியா­மின் பங்கு அதி­கம் உள்­ளது. தமது பிரச்­சி­னை­கள் பற்றி பள்ளி ஆலோ­ச­க­ரி­டம் துர்­கேஸ்­வரி மனம்­விட்டுப் பேசி­னார்.

ஒவ்­வொரு வார­மும் திரு நியாம் துர்­கேஸ்­வ­ரி­யின் நலனை விசா­ரித்து, மனதை நிலைப்­ப­டுத்­தும், கவ­னத்தை அதி­க­ரிக்­கும் உத்­தி­க­ளைக் கற்­றுக்­கொ­டுத்­தார்.

அது­மட்­டு­மல்­லா­மல் மன­தைத் திடப்­ப­டுத்­த­வும் தன்­னிம்­பிக்­கையைக் கூட்டவும் இணைப்­பாட நட­வ­டிக்­கை­களும் துர்­கேஸ்­வ­ரிக்கு உறு­து­ணை­யாக இருந்­தது.

பள்­ளி­யின் மாண­வர் மன்­றத்­தில் சேர்ந்து பள்ளி அள­வி­லான நிகழ்ச்­சி­களை அவர் ஏற்­பாடு செய்து வெற்­றி­க­ர­மாக வழி­ந­டத்­தி­னார்.

அதோடு பள்­ளி­யின் தரைப்­பந்து குழு­வில் இடம்­பெற்று போட்­டி­களில் பங்­கு­பெற்­றார்.

இதன்­மூ­லம் கிடைத்த அனு­ப­வங்­களே அவ­ருக்­குப் புத்­து­ணர்ச்­சி­யை­யும் எதை­யும் சாதிக்­க­லாம் என்ற தைரி­யத்­தை­யும் தந்­தது.

படிப்­ப­டி­யாக துணிச்­சல் பெறு­வதை துர்­கேஸ்­வரி உணர்ந்­தார்.

பள்ளி ஆசி­ரி­யர்­களும் குடும்ப உறுப்­பி­னர்­களும் இவருக்கு உறு­து­ணை­யாக இருக்க, கல்­வி­யில் சிறந்­தோங்க வேண்­டும் என்ற இலக்­கை நோக்கி அவர் ‘ஓ’ நிலை தேர்­வுக்­காக தயா­ரா­னார்.

கடந்­தாண்டு தொடக்­கத்­தில், சிண்டா ‘ஸ்டெப்’ அறி­வி­யல், கணித துணைப்­பாட வகுப்­பு­களில் அவர் சேர்ந்­தார்.

ஆண்­டின் நடு­வில் ‘ஓ’ நிலை தமிழ்­மொழிப் பாடத்­தில் தேர்ச்­சி­பெற்­றது ஊக்­க­ம­ளிக்­கும் வகை­யில் அமைந்­தது.

அண்­மை­யில் ‘ஓ’ நிலைத் தேர்­வின் முடி­வு­கள் வெளி­யா­கின. அதில் தமது எதிர்­பார்ப்­பை­யும் மிஞ்சி சிறப்­பாக தேர்ச்சி பெற்­றார் துர்­கேஸ்­வரி.

ஆங்­கி­லம் உட்­பட சிறந்த ஐந்து பாடங்­களில் (L1R4) இவர் 7 புள்­ளி­கள் பெற்று நன்­யாங் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் சமூக சேவை தொடர்­பான பட்­ட­யக்­கல்­வியை மேற்­கொள்ள ஆயத்­த­மாகி வரு­கி­றார்.

“என் பள்ளி ஆலோ­ச­கர் எனக்­குக் கொடுத்த ஊக்­கம் போன்று நானும் மற்­ற­வர்­க­ளின் வாழ்க்­கை­யில் ஒரு ஆக்கபூர்வமான தாக்­கத்தை ஏற்­ப­டுத்த விரும்­பு­கி­றேன்,” என்று கூறி­னார் 17 வயது துர்­கேஸ்­வரி.

“பிரச்­சினை ஏற்­பட்­டால் உதவி நாட தயங்­கா­தீர்­கள். எப்­போ­தும் இலக்கை நினை­வில் கொண்டு விடா­மு­யற்­சி­யு­டன் செயல்­ப­டுங்­கள்,” என்­கி­றார் சமூ­க சேவை துறை­யில் முத்­திரை பதிக்க ஆவ­லு­டன் துடிக்­கும் துர்­கேஸ்­வரி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!