தமிழிசை: கறுப்புப் பணத்துக்காக அதிமுக, திமுக கூட்டு சேர்ந்துள்ளன

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கறுப்புப் பணத்துக்காக திமுகவும் அதி முகவும் கைகோத்துள்ளன என்று கூறியிருக்கிறார். “கறுப்புப் பணத்தை வெளிக் கொணரும் பிரதமர் மோடியின் முயற்சிக்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். “ஆனால், எதிர்க்கட்சிகள் இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மக்களைக் காரணம் காட்டி மக்களவையை முடக்குவது, மக்களவையில் ஆர்ப்பாட்டம் செய்வது, போராட்டங்களில் ஈடு படுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன,” என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

“மக்கள் வரிசையில் நின்று சிரமப்படுகின்றனர். “அதற்காக நாம் மக்களிடம் மன்னிப்புக் கேட்போம். ஆனால் வருங்காலத்தில் வரிகள் எல்லாம் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்து உள்ளனர்,” என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.