ஈரான் முன்னாள் அதிபருக்கு பொதுமக்கள் அஞ்சலி

டெஹ்ரான்: ஈரான் நாட்டின் முன் னாள் அதிபர் அக்பர் ஹாஷெமி ரஃப்சன்ஜானிக்கு அந்நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமெய்னி உட்பட ஏராளமான வர்கள் அஞ்சலி செலுத்தினர். "வேறுபாடுகள் இருந்தாலும் போராட்டங்களின் தோழர்," என்று அயதுல்லா கொமேனி புகழாரம் சூட்டினார். இந்நிலையில் அதிபர் ஹசன் ரவானி, "இஸ்லாமிய புரட்சியின் உயர் தலைவர்," என்று அவரை வருணித்தார். இதற்கிடையே முன்னாள் அதிபர் அக்பர் ஹாஷெமி ரஃப்சன் ஜானியின் மறைவுக்கு மூன்று நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள் ளது. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரஃப்சஞ்சானி டெஹ்ரானில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் காலமானார். அவருக்கு வயது 82. 1980ல் நாடாளுமன்ற உறுப் பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பின்னர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை பலத் துடன் வெற்றி பெற்று அதிபரானார்.

ஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஹாஷெமி ரஃப்சன்ஜானியின் நல்லுடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!