ஃபெர்ன்வேல் சமூக மன்றம்

பல வசதிகளுடன் உருவாகும் ஃபெர்ன்வேல் சமூக மன்றம் 2020ல் கட்டி முடிக்கப்படும். அந்த மன்றம் திட்டமிடப்பட்டதைப்போல உருவாகி வருவதாக செங்காங் வெஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் லாம் பின் மின் தெரிவித்தார். இப்போது அந்த மன்றத்தின் பணி, வடிவமைப்புக் கட்டத்தில் இருக்கிறது. விரைவில் ஏலக்குத்தகைக்கு அழைப்பு விடுக்கப்படும். அதன் பிறகு உடனே பணிகள் தொடங் கும் என்று செங்காங் வெஸ்ட்டின் 11வது ஆண்டுவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டாக்டர் லாம் செய்தியாளர்களிடம் பேசியபோது குறிப்பிட்டார். செங்காங் வெஸ்ட் 2006ல் அங் மோ கியோ குழுத்தொகுதி யின் ஓர் அங்கமாக இருந்தது. அது 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு தனிநபர் தொகுதியாக ஆக்கப்பட்டது. இதற்கிடையே, அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளு மன்ற உறுப்பினரான பிரதமர் லீ சியன் லூங், டாக்டர் லாம் இருவ ரும் புதிய ஃபெர்ன்வேல் சமூக மன்றத்தின் முகப்புத் தோற்றத்தை நேற்று வெளியிட்டனர்.

செங்காங் வெஸ்ட் 11வது ஆண்டுவிழா கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) டாக்டர் முக்தார், டாக்டர் லாம் பின் மின், பிரதமர் லீ சியன் லூங், டாக்டர் கோ போ கூன், டெரில் டேவிட் ஆகியோர். பிரதமர் லீ சறுக்கு வண்டியில் அமர்ந்துள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதரை அதிபர் டிரம்ப் நியமித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதராக கே. டி. மெக்ஃபர்லண்டை நியமித்து இருக்கிறார். இந்த மாது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புத் துணை ஆலோசகராக நியமிக் கப்பட்டு நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. அந்தப் பதவியிலிருந்து இவரை அகற்றிய அதிபர், இவரை சிங்கப்பூருக்கான தூதராக நியமித்து இருக்கிறார். முன்னாள் நாடாளுமன்ற நாயகரும் டிரம்ப் ஆதரவாளருமான நியூட் கிங்ரிச்சின் மனைவியான கலிஸ்தா கிங்ரிச்சை வத்திக்கனுக்கான தூதராக அமெரிக்க அதிபர் நியமித்தார். திரு டிரம்ப் ரோமில் மே 24ஆம் தேதி போப் பிரான்சிசை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!