உயிரைப் பாதுகாக்கும் மெடிஷீல்டு லைஃப் விரிவாக்கம்

மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் புதிய, புத்தாக்கமான சிகிச்சைகளையும் உள்ளடக்கும் என்ற அண்மை அறிவிப்பு, இந்தத் திட்டத்தின் நோக்கத்தை ஒட்டியே அமைந்துள்ளது.

2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த அடிப்படை, கட்டாய சுகாதாரக் காப்புறுதித் திட்டம், சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்பில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே உள்ள நோய்களைத் தாண்டியும், வாழ்நாள் முழுவதுக்கும் பெரிய மருத்துவக் கட்டணங்களைச் சமாளிக்க அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் அது உதவுகிறது.

குறிப்பாக உயிரணு, திசு, மரபணு சிகிச்சைப் பொருள்கள் போன்ற புதிய, புத்தாக்கமான சிகிச்சைகளை இத்திட்டத்தில் உள்ளடக்குவதன் மூலம், சுகாதாரப் பராமரிப்பு ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்லப்படும்.

சில உயிரணு, திசு, மரபணு சிகிச்சைப் பொருள்கள் வாழ்க்கையை மாற்றக்கூடியவை. சுகாதாரப் பராமரிப்பின் தரம் தேசிய நலனில் அத்தியாவசியமானது என்பதால், சிங்கப்பூரர்கள் ‘மெடிஷீல்டு லைஃப்’ கட்டணங்களைக் கவனிக்க வேண்டும்.

குழந்தைகள் சிகிச்சை பெறக்கூடிய நோய்களினால் உயிர் இழக்கும் சூழ்நிலை தவிர்க்கப்படக்கூடிய சமுதாயத்தில் வாழும் பட்சத்தில், இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும்.

இத்திட்டத்தின் விரிவாக்கத்திற்கு அதிக ஆதரவு கொடுக்கப்படவேண்டும்.

செலவுப் பரிசீலனைகள் தொடர்ந்து முக்கியமாக இருக்கும். அவை அதிகாரிகளால் நோய் தீர்க்கும் விளைவுகளின் பலன்களோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படும்.

அதனால், குறைவானோரை மட்டுமே குணப்படுத்துவதற்குக் குறைவான சாத்தியம் உள்ள விலை உயர்ந்த சிகிச்சை, கட்டுப்படியான செலவில் செய்யப்படும் சிகிச்சையாகக் கருதப்படாது.

இந்த அணுகுமுறையை எடுத்துக்கொண்டால், வழக்கமல்லாத சிகிச்சைகள் மெடிஷீல்டு லைஃப் திட்டத்தில் இடம்பெற்று, அதற்கான கட்டணங்கள் உயர்ந்தால் ஆபத்து கிடையாது.

இருப்பினும், பாதுகாப்பானவை, பயனுள்ளவை, கட்டுப்படியானவை எனக் கருதப்படும் உயிரணு, திசு, மரபணு சிகிச்சைப் பொருள்கள் சிங்கப்பூரர்களுக்குக் கிடைக்கப்பெறும் தெரிவுப் பட்டியலில் இருக்க வேண்டும்.

மெடிஷீல்டு லைஃப் திட்டத்தின் மறுஆய்வு குறித்து நிபுணர் குழு ஒன்று முன்வைத்த பரிந்துரைகள் இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவை கடைசியாக 2020ஆம் ஆண்டில் மறுஆய்வு செய்யப்பட்டன. அப்போது கட்டணங்கள் சராசரியாக 25 விழுக்காடு கூடின.

கட்டணங்களில் ஏற்படும் உயர்வு, பெரிய மருத்துவக் கட்டணங்களுக்கு எதிராகக் கூடுதல் உத்தரவாதம் கொடுக்கும். இருப்பினும், அனைத்து சிங்கப்பூரர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், மெடிஷீல்டு லைஃப் கட்டணங்களில் ஏற்படும் உயர்வுகள் மிக முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படும்.

அந்த வகையில், முடிந்த அளவு மெடிசேவ் மூலம் கட்டணங்கள் முழுமையாகச் செலுத்தப்படுவதற்குத் தேவையானதைச் செய்யப்போவதாக அரசாங்கம் கூறியிருந்தது.

எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மெடிசேவ் நிரப்புதொகைகளையோ கட்டணச் சலுகைகளையோ அதிகரிப்பது குறித்து அது பரிசீலிக்கும்.

அடிப்படையில், உண்மையாகவே கட்டணங்களைச் செலுத்தமுடியாத காரணத்தால் யாரும் மெடிஷீல்டு லைஃப் பயன்களை இழந்துவிட மாட்டார்கள் என்று உறுதி அளிக்கப்படுகிறது. ஏற்கெனவே முன்னோடித் தலைமுறை, மெர்டேக்கா தலைமுறை சலுகைகள், குறைந்த, நடுத்தர வருமானம் பெறுவோருக்குக் கட்டணச் சலுகைகள், கட்டணச் சலுகைகளுக்குப் பின்னரும் கட்டணங்களைச் செலுத்த முடியாதவர்களுக்குக் கூடுதல் உதவி ஆகியவை உள்ளன.

ஆகப் புதிய சிகிச்சைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் அதே வேளையில், பெரிய மருத்துவக் கட்டணங்களின் தொடர்பில் குடிமக்களின் அச்சத்தைத் தணிக்கும் தேசிய திட்டமாகத் தொடர்ந்து கட்டுப்படியான விலையில் மெடிஷீல்டு லைஃப் இருக்கவேண்டும் என்பதே முக்கியம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!