விரைவுச்சாலை விபத்துகள்: மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம்

தீவு விரைவுச்சாலையில் நேற்று முன்தினம் நடந்த விபத்து ஒன்றில் மோட்டார்சைக்கிளோட்டி படுகாயம் அடைந்தார். சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலை யில் இரவு 7 மணிக்கு நடந்த இந்த விபத்தில் கறுப்பு நிற கார் ஒன்று மோட்டார் சைக்கிளை மோதியது. மோதப்பட்ட மோட்டார் சைக்கிள் வலது பக்கத் தடத்திற் குத் தள்ளப்பட்டது. வலது பக்கத் தடத்தில் சென்றுகொண்டிருந்த வெள்ளை கார் ஒன்று மோட்டார் சைக்கிளோட்டி மீதும் அவரது வாக னத்தின் மீதும் ஏறிச் சென்றது. அப்போது அந்த காரில் இருந்து தீப்பொறிகள் கிளம்பியதா க வும் அந்த மோட்டார் சைக்கிளை கொஞ்ச தூரத்திற்கு அந்த கார் இழுத்துச் சென்றதாகவும் தெரிகிறது. விபத்தில் சிக்கிய 46 வயது மோட்டார்சைக்கிளோட்டி தேசிய பல்கலைக்கழக மருத்துவ மனை யில் சேர்க்கப்பட்டார். அவர் படு காயமடைந்துள்ளதாகவும் இப் போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

இன்னொரு சம்பவத்தில், நேற்று புக்கிட் தீமா விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் மண்டாய்க்குச் செல்லும் வழியில் மூன்று கார்கள் மோதிய இன் னொரு விபத்தில் 24 வயது மோட்டார்சைக்கிளோட்டி காய மடைந்தார். அவர் மருத்துவம னையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிலேத்தார் விரைவுச்சாலையில் மூன்று கார்கள், ஒரு மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி தனக்கு முன் சென்ற காரில் தூக்கியெறிப்பட்டார். படம்: ‌ஷின்மின்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!