அனைவரையும் மகிழ்விக்கும் சாங்கி ‘ஜுவல்’ தொகுதி

சாங்கி விமான நிலையத்தில் புதி தாக அமையவுள்ள பொழுது போக்கு, கடைத்தொகுதியான 'ஜுவலி'ல் 40 மீட்டர் உள்ளரங்கு நீர்வீழ்ச்சி, தரையிலிருந்து 23 மீட்டர் உயரத்தில் அமையவுள்ள தொங்கு பாலம், என பல சிறப்புப் பிரிவுகள் இடம்பெறுகின்றன. ஜுவல் கட்டத்தின் உயர் மாடியில், கிட்டத்தட்ட 14,000 சதுர மீட்டர் பரப்பளவில் அதாவது 11 ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் அளவில் உருவாகும் கனோபி பூங்காவில் இவை இடம்பெறுகின் றன. கண்ணாடித் தரையுடன் 50 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் தொங்கு பாலம் இதன் மற்றொரு சிறப்பு. இங்கு இடம்பெறும் இந்த பாலத்தில் செயற்கை முகில்களுக் கிடையே நடக்கலாம்.

நீர்வீழ்ச்சியில் இரவு நேரத்தில் ஒலி, ஒளி காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். பிரபலமான கட்டட வடிவமைப் பாளர் மொசே சாஃப்டியின் வடிவ மைப்பில் சாங்கி விமான நிலையத் தின் முனையம் 1ல் அமைக்கப்பட்டு வரும் ஜுவல் 2019ஆம் ஆண் டின் தொடக்கத் தில் திறக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய 134,000 சதுர மீட்டர் பரப்பளவில் தனித் தன்மை யான அரை வட்ட வடிவத்தில் அமைந்துள்ள இந்தக் கட்டடம் கண்ணாடிகளாலும் இரும்பாலும் கட்டப்பட்டு வருகிறது.

வானத்திலிருந்து ஒரே இடத்தில் மழை கொட்டுவதுபோல அமைக்கப்பட்டிருக்கும் இந்த நீர்வீழ்ச்சி ஜுவல் பொழுதுபோக்கு, கடைத்தொகுதியில் பார்வையாளர்களை நிச்சயம் கவரும் என்று சொல்லப்படுகிறது. படம்: ஜுவல் சாங்கி விமான நிலையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!