பிரசவ வலியால் துடித்த பயணிக்கு உதவிய குடிநுழைவு அதிகாரி

சாங்கி விமான நிலையத்தில் உள்ள குடிநுழைவு முனையத்தில் பிரசவ வலியால் துடித்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுப்பயணிக்கு உதவிய குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரி ஜஸ்டின் டியோ கோக் குவானுக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதியன்று சிங்கப்பூருக்கு வந்த 28 வயது தாய்லாந்து சுற்றுப்பயணிக்குத் திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. குடிநுழைவு முனையத்தில் இருந்த அந்தப் பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டதைக் கண்ட அதிகாரிகள், உதவி கண்காணிப்பாளர் ஜஸ்டின் டியோவை அழைத்தனர்.

குடிநுழைவு தொடர்பான விஷயங்களில் அந்தப் பெண்ணுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் திரு டியோ உடனடியாக உதவினார். அதனைத் தொடர்ந்து, சாங்கி விமான நிலையத்தின் மருத்துவக் குழுவையும் ராஃபிள்ஸ் மருத்துவக் குழுவையும் தொடர்புகொண்டு பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தார். சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு அதிகாரி டியோ திறம்பட உதவியதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.

அதிகாரி ஜஸ்டின் டியோ. படம்: குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon