சுடச் சுடச் செய்திகள்

பலவீனமான முதியோருக்கு உடல், மனநல செயல்திட்டம் தொடக்கம்

எளிதில் பாதிக்கப்படக்கூடிய மூத்த குடிமக்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நலமாக தொடர்ந்து இருந்துவர உதவும் வகையில் ஒரு செயல்திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. சுவா சூ காங் ஃபெய் இயூ ஓய்வுபெற்றோர் நிலையத்தில் சில முதியவர்கள் அந்தச் செயல்திட்டத் தில் பங்கெடுத்துக்கொண்டனர். நினைவாற்றலைத் தூண்டும் விளையாட்டுகளில் ஈடுபடுவது, ஒரே இடத்தில் கால்களை மடித்து நீட்டி பயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றில் அவர்கள் ஈடு பட்டார்கள். அந்தத் திட்டத்திற்கு ‘உங்களுக்கான மகிழ்ச்சிகரமான வயது மூப்பு மேம்பாட்டுச் செயல் திட்டம்’ என்று பெயர். இந்த மேம்பாட்டு செயல்திட்டம் இம்மாதம் அந்த ஓய்வுபெற்றோர் நிலையத்தில் தொடங்கப்பட்டது. 60க்கும் அதிக வயதுள்ள எளிதில் பாதிக்கக்கூடிய வாய்ப்புள்ள முதியவர்களுக்கு உதவுவது இத் திட்டத்தின் நோக்கமாகும்.

இத்தகைய முதியோர் உடல் பலம் குன்றி காணப்படுவார்கள். அவ்வளவாக உடல் உழைப்பில் ஈடுபடமாட்டார்கள். மந்தமாக இருப்பார்கள் என்று நேற்று செய்தி யாளரிடம் பேசிய இணைப் பேராசிரியை ரேஷ்மா மெர்ச்சண்ட் தெரிவித்தார்.

சுவா சூ காங் ஃபெய் இயூ ஓய்வுபெற்றோர் நிலையத்தில் முதியோருக்கு உடல், மனநல உதவி. படம்: சாவ் பாவ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon