‘தலையற்ற உடல் காணாமற்போன செய்தியாளரின் சடலம்தான்’

கோபன்ஹேகன்: டென்மார்க் அருகே உள்ள கடல் பகுதியில் காணப்பட்ட தலையில்லாத உடல், காணாமற்போன சுவீடன் நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் கிம் வால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக டென்மார்க் போலிசார் கூறினர். மரபணு சோதனை மூலம் இது தெரியவந்துள்ளது என்று போலிசார் கூறினர். பீட்டர் மாட்சென் என்பவருடன் நீர்மூழ்கிக் கப்பல் பயணத்தை மேற்கொண்ட கிம் வால் என்ற பெண்ணை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குப் பிறகு காணவில்லை. கப்பல் விபத்தில் கிம் வால் இறந்துவிட்டதாகக் கூறிய பீட்டர் மாட்சன் மீது நோக்கமற்ற மரணத்தை விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் 40 டன் எடை கொண்ட கப்பலை மாட்சென் வேண்டுமென்றே மூழ்கடித்து அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாக டென்மார்க் போலிசார் நம்புகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon