அமித் ஷா, ஸ்மிருதி இரானி பதவியேற்பு

புதுடெல்லி: பாரதிய ஜனதாக் கட்சித் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இருவரும் நேற்று நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களாகப் பதவி ஏற்றனர். மேலவையில் அமித் ஷா, ஸ்மிருதி இரானி இருவரும் முதல் முறையாக உறுப்பினர்களாகியுள்ளனர். ஸ்மிருதி இரானி சமஸ்கிருதத்தில் பதவியேற்றார். துணை அதிபர் வெங்கையா நாயுடு இருவருக்கும் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மேலவையில் அமித் ஷா நுழைவது கட்சிக்கு ஊக்கத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்த தேர்தலில் இருவரும் குஜராத் மாநிலத்திலிருந்து வெற்றி பெற்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon