பெருமாள் மலை எங்கள் மண்; அதைக் காக்க போராடுவோம்: சீமான்

மதுரை: பெருமாள் மலையைப் பாதுகாக்கப் பொதுமக்களுடன் இணைந்து போராடத் தயார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பெருமாள் மலையில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுக்கவும் கூட யாரை யும் அனுமதிக்க இயலாது என அவர் செய்தியாளர்களிடம் திட்ட வட்டமாகக் கூறினார். மதுரை மாவட்டம், வாடிப்பட்டிப் பகுதி அருகே உள்ள உசிலம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பெரு மாள் மலை. இந்த மலையில் இருந்து பலர் முறைகேடாகக் கற்களை வெட்டி எடுத்துச் செல் வதாகத் தொடர் புகார்கள் எழுந்து வந்தன.

இந்நிலையில், அங்கு கல்குவாரி அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே பெருமாள் மலையைக் காக்க வலியுறுத்தி உள்ளூர் மக்கள் பல்வேறு போராட் டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பெருமாள் மலை யில் இருந்து கற்களை வெட்டி எடுப்பதற்கான பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும் இதற்கான ஏலம் நடைபெற்று உள்ளதாகவும் அண் மையில் தகவல் வெளியானது. மேலும் வெட்டி எடுக்கப்பட்ட கற்களைச் சுத்தம் செய்து, ஒழுங்கு படுத்த மலையடிவாரத்தில் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனால் அப்பகுதி பொது மக்களும் விவசாயிகளும் கடந்த இரு வாரங்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்துப் பேசிய மதுரை ஆட்சியர் பெருமாள் மலை எக்காரணத்தைக் கொண் டும் ஏலம் விடப்படமாட்டாது என உறுதியளித்தார். இதனால் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் பெருமாள் மலைப் பகுதிக்கு நேரில் சென்ற சீமான், அம்மலையைக் காக்க போராடு பவர்களுக்குத் தம்முடைய ஆத ரவைத் தெரிவிப்பதாகக் கூறினார். “இதில் எந்தவித அரசியலும் இல்லை. இம்மண்ணை என் மக்களைப் பாதுகாக்க கடைசி வரை போராடுவேன். “பெருமாள் மலைப் பகுதியில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணைக் கூட யாரும் எடுத்துச் செல்ல விடமாட்டேன்,” என்றார் சீமான்.