அரசாங்க சேவை ஊழியர்களுக்கு ஒரு மாத ஆண்டிறுதி ‘போனஸ்’

பொருளியல் வளர்ச்சி மேம்பட்டு வருவதால், அரசாங்க சேவை இவ்வாண்டு கூடுதலான ஆண்டு இறுதி மாறுவிகித போனஸ் வழங் குகிறது. அரசாங்க சேவையின் 84,000 ஊழியர்களும் ஆண்டிறுதி மாறு விகித போனஸாக ஒரு மாதச் சம்பளத்தைப் பெறுவார்கள். இது சென்ற ஆண்டு கிடைத்த 0.5 மாத போனஸைவிட அதிகம் என பொதுச் சேவைப் பிரிவு நேற்று தெரிவித்தது. வழக்கமாக வழங் கப்படும் 13ஆம் மாதச் சம்பளத் துடன் ஆண்டிறுதி மாறுவிகித போனஸும் வழங்கப்படும். சென்ற ஆண்டோடு ஒப்பிடுகை யில், இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் பொருளியல் 5.2 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது.

இரண்டாம் காலாண்டின் 2.9 விழுக்காடு வளர்ச்சியைவிட இது அதிகம். ஆண்டு முழுவதற்கும் 3 முதல் 3.5 விழுக்காடு வரையிலான வளர்ச்சி கிட்டும் என கணிக்கப் படுகிறது. “2016- உடன் ஒப்பிடுகையில் 2017-ன் அதிக நம்பிக்கையளிக்கும் பொருளியல் கண்ணோட்டத்திற்கு ஏற்ப ஆண்டிறுதி போனஸ் வழங் கப்படுகிறது,” என பொதுச் சேவைப் பிரிவு குறிப்பிட்டது. “நம்பிக்கையளிக்கும் பொருளி யல் கண்ணோட்டத்தால் வேலை செய்யும் மக்கள் பயனடைவதைக் கண்டு மனம் நெகிழ்கிறோம்,” என தேசிய தொழிற்சங்கக் காங் கிரசின் உதவித் தலைமைச் செய லாளர் சாம் ஹுய் ஃபொங் கூறி னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon