வெட்டுக்கத்தியால் தாக்கினார்; இந்திய ஊழியருக்கு சிறைத்தண்டனை, பிரம்படி

கட்டுமானத்துறை ஊழியர் ஒருவர் தன்னுடன் விடுதியில் தங்கி யிருந்த வேறு ஓர் ஊழியரின் கழுத்திலும் மார்பிலும் வெட்டுக் கத்தியால் பல தடவை தாக்கினார். தரையில் தனது வாந்தியைச் சுத்தப்படுத்துமாறு கூறிய கணேசன் அருண் பிரகாஷ் என்பவருக்கு கடுமை யான காயங்களை ஏற்படுத்தியதற் காக அருணாச்சலம் மணிகண் டன், 20, என்ற கட்டுமானத்துறை ஊழியருக்கு மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட் டது. ஆறு பிரம்படிகள் கொடுக் கும்படி உத்தரவிடப்பட்டது. அருணாச்சலம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்தியாவைச் சேர்ந்த இந்த இரண்டு ஊழியர்களும் ஓல்டு சுவா சூ காங் ரோட்டில் இருக்கும் சுங்கை தெங்கா லாட்ஜ் என்ற வெளிநாட்டு ஊழியர் விடுதியில் தங்கியிருந்தார்கள். கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் குடித் திருந்த அருணாச்சலம் அறையின் தரையில் வாந்தி எடுத்துவிட்டார். அதைச் சுத்தப்படுத்தும்படி அரு ணாச்சலத்திடம் கணேசன், 21, கூறினார்.