சுடச் சுடச் செய்திகள்

அங்கூலியா பள்ளிவாசல் மறுசீரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டது

முஹம்மது ஃபைரோஸ்

ஃபேரர் பார்க் எம்ஆர்டி நிலையம் அருகே 128 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கூலியா பள்ளி வாசல் இரண்டாவது முறையாக மறுசீரமைக்கப்படவுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் பெரிதள வில் மேற்கொள்ளப்படுவதற்கு வகைசெய்ய இப்பள்ளிவாசல் இன்று முதல் அதன் கதவுகளை மூடுகிறது. இதை முன்னிட்டு இறுதி ஜும்ஆ தொழுகையில் கலந்துகொள்ள நேற்றுப் பிற்பகல் இப்பள்ளிவாசலில் சுமார் 1,500 பேர் திரண்டனர்.

அவர்களுடன் தொடர்பு, தகவல் அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டாக்டர் யாக்கூப் இப்ராஹிம், சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (முயிஸ்) தலைமை நிர்வாகி ஹாஜி அப்துல் ரஸாக் மரைக்கார் ஆகியோரும் கலந்துகொண்டனர். இப்பள்ளிவாசலின் மறுசீரமைப் புப் பணிகள் லிட்டில் இந்தியாவில் வசிக்கும், பணிபுரியும் முஸ்லிம் களின் சமய தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்று அமைச்சர் யாக்கூப் செய்தியாளர்களிடம் கூறினார்.

அத்துடன், முஸ்லிம் சமூகத்தி னர் முன்வந்து இப்பள்ளிவாசலுக்கு பங்களிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். தொழுகைக்கு முன்னதாக டாக்டர் யாக்கூப் பள்ளிவாசலின் மறுசீரமைப்புப் பணிகளை அதிகார பூர்வமாகத் திறந்து வைத்தார்.

அங்கூலியா பள்ளிவாசலின் மறுசீரமைப்புப் பணிகளை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் (நடுவில்). உடன் இருப்பவர் முயிஸின் தலைமை நிர்வாகி ஹாஜி அப்துல் ரஸாக் மரைக்கார் (வலக்கோடி). படம்: பெரித்தா ஹரியான்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon