புதுப் பொலிவுடன் ஆலயம்; பக்தர்களுக்குபுதியவசதிகள்

ப. பாலசுப்பிரமணியம்

அடுத்த மாதம் 22ஆம் தேதி நடைபெற இருக்கும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிராங்கூன் சாலையில் அமைந் திருக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் புதுப்பிப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. இனி கோயிலுக்கு வந்தவுடனே பக்தர்கள் கால் கழுவ நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையிருக்காது. கூடுதல் தண்ணீர் குழாய்கள் கோயிலில் பொருத்தப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

அண்மை யில் அக்கோயி லுக்குச் சென் றிருந்தவர்கள் கோயிலின் முன் வாசலில் சில வித்தியாசமான அம்சங்களைப் கண்டிருப்பர். அவற்றில் கோயில் ராஜ கோபுரத்தின் முன்பகுதியி லேயே செங்கற் களால் கூடிய தரைப் பகுதி விரிவாக்கம் கண்டுள்ளது ஒன்றாகும். சிறு அளவிலான கோயில் அன்னதானம், பிரசாத விநியோகம் ஆகியவை அப்பகுதியில் நடக்கக்கூடும் என்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் நிர்வாகக் குழு தலைவர் டாக்டர் கே. வெள்ளையப்பன் தெரிவித்தார்.

பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக் காண்டு பெருகிவரும் நிலையில், பெரிய அளவிலான அன்னதானங்களை ஈடு கொடுக்கும் புது சமையலறை அமைக் கப்பட்டுள்ளது. இது பழைய சமையலறையைவிட 30% பெரியதாகும். கோயிலின் உட்புறத்தில் கொடிமரம் இடம் மாற்றப்பட்டதால் பெருமாள் சன்ன திக்கு முன்னரே பக்தர்கள் கூடுவதற்கு இன்னும் கூடுதலான இட வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக இந்தக் கோயில் இருப்பதால் பெரும்பாலான கோயில் சிற்பங்கள், நுட்பமான வேலைப்பாடுகளைப் பழைய நிலைக்குக் கொண்டுவர தமிழகத்திலிருந்து திரு ஆனந்த் ஸ்தபதியும் அவரது குழு வினரும் வரவழைக்கப்பட்டனர். சாயம் எளிதில் போகாத, பூச்சிகள் எளிதில் தங்காத பாரம்பரிய மூலிகைக் கலவையை இவர்கள் பயன்படுத்தி கோயில் விமான, கோபுர வேலைப்பாடுகளுக்குப் புதுப்பொழிவு கொடுத்துள்ளனர்.

கோயிலின் பின்பகுதியில் ஏறத்தாழ 300 பேர் வரை ஒரே சமயத்தில் அமர்ந்து உண்பதற்கான உள்புற வசதியும் அமைந் துள்ளது. இத்தருணத்தில் கோயிலுக்குச் சக்கர நாற்காலியில் வரும் முதியவர்களின் தேவைகளுக்கு இணங்க, உடற் குறையுள்ளோரும் பயன்படுத்தும் கழி வறைகளும் கட்டடத்தில் உள்ளன.

மேலும், சக்கர நாற்காலியைப் பயன் படுத்துவோர் கோயில் சன்னதி பகுதிக்குச் செல்வதற்குத் தற்காலிகச் சரிவு மேடையைப் பொருத்துவது குறித்து கோயில் நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. "புரட்டாசி, தைப்பூசம் போன்ற விஷேச நாட்களையும் மற்ற பண்டிகைகளையும் விமரிசையாக நடத்துவதற்குப் புதிய வசதிகள் ஏற்றதாக விளங்கும். "குடமுழுக்கு விழாவிற்கு முன்னதாக நடத்தப்படும் இந்தப் புதுப்பிப்புப் பணி களுக்குக் கைகொடுத்த நன்கொடையாளர் களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்," என்றார் டாக்டர் கே.வெள்ளையப்பன்.

சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் புதுப்பிப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. அடுத்த மாதம் 22ஆம் தேதி, கோயிலின் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!