களைகட்டும் தமிழ்மொழி விழா

சிங்கப்பூரில் பல்வேறு தரப்பினர் நடத்தும் 58 நிகழ்ச்சிகளோடு இவ்வாண்டு தமிழ்மொழி விழா களைகட்டியுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கி இம்மாதம் 29ஆம் தேதி வரை நடைபெறும் தமிழ்மொழி விழாவின் அதிகார பூர்வ தொடக்க நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தேறியது. தமிழ்மொழி விழாவில் இளையர்களுக்கான நிகழ்ச்சி களும் இடம்பெறுகின்றன. இளையர்களிடையே தமிழ் மொழிப் புழக்கத்தை அதிகரிப் பதற்கான முயற்சியாக இத்தகைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் படுகின்றன. இளையர்களுக்காக நடத்தப்பட இருக்கும் சில நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

w சொற்களம்
நாள்: 7 ஏப்ரல், 2018
நேரம்: மாலை 6 மணி முதல்
இரவு 8.30 மணி வரை
இடம்: மீடியகார்ப் வளாகம்
w தமிழ் இலக்கியப் போட்டிகள்
நாள்: 7 ஏப்ரல், 2018
நேரம்: காலை 8 முதல் பிற்பகல்
12.30 மணி வரை
இடம்: ராஃபிள்ஸ் கல்வி
நிலையம்
w இசை வழி கல்வி
நாள்: 14 ஏப்ரல், 2018
நேரம்: காலை 10 முதல்
பிற்பகல் 1 மணி வரை
இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி
நிலையம்
w சொல், சொல்லாத சொல்
நாள்: 14 ஏப்ரல், 2018
நேரம்: காலை 9 முதல்
பகல் 12 மணி வரை
இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி
நிலைய அரங்கம்
w இளவேனில்
நாள்: 15 ஏப்ரல், 2018
நேரம்: காலை 9 முதல்
பகல் 12 மணி வரை
இடம்: தேசிய நூலக வாரியக்
கட்டடம்
w இன்பத் தமிழும் இளைய
தலைமுறையும்
நாள்: 15 ஏப்ரல், 2018
நேரம்: மாலை 6 முதல்
இரவு 9 மணி வரை
இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி
நிலைய அரங்கம்
w ஜிங்கில் ஜிகில்
நாள்: 21 ஏப்ரல், 2018
நேரம்: பிற்பகல் 1.30 முதல்
3 மணி வரை
இடம்: இந்திய மரபுடையமை
நிலையம்
w 30ஆம் புகுமுக
வகுப்புகளுக்கான தமிழ்மொழி
இலக்கியக் கருத்தரங்கு
நாள்: 21 ஏப்ரல், 2018
நேரம்: காலை 8.30 முதல்
பிற்பகல் 1 மணி வரை
இடம்: யீ‌ஷூன் தொடக்கக்
கல்லூரி மண்டபம்
w தகவல் தொழில்நுட்பத்தில்
தமிழ் - நாங்கள் கற்றதும்
பெற்றதும்
நாள்: 27 ஏப்ரல், 2018
நேரம்: பிற்பகல் 2 மணி
இடம்: பார்ட்லி உயர்நிலைப்பள்ளி