ஒன்றிணைந்து தமிழ் வளர்க்க ஊக்குவிப்பு

பள்ளிகள், தொடக்கக்கல்லூரி கள், பலதுறைத் தொழிற்கல்லூரி கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய வற்றில் இருக்கும் தமிழ் மன்றங் கள் மொழி சார்ந்த போட்டிகள், கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சி களை ஒருங்கிணைத்து மாணவர் களைத் தமிழ்மொழியால் இணைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் மன்றத்தில் உறுப்பினர் களாக இருந்த முன்னாள் மாணவர்கள் இணைந்து ‘என்டியு டிஎல்எஸ் முன்னாள் மாணவர்சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி உள்ளனர். நன்யாங் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தின் முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. ஈராண்டுகளுக்கு ஒரு முறை இந்த அமைப்பின் செயற்குழு மாற்றப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த முன்னாள் மாணவர் சங்கத்தை தற்போது சுந்தர் பிலவேந்தர்ராஜின் தலை மையிலான இரண்டாவது செயற் குழு வழிநடத்தி வருகிறது. “பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலை, குடும்பம் என்று பலரும் சிதறிவிடு கின்றனர். ஒரே குழுவாக பல் கலைக்கழகத்தில் இருந்தபோது இணைந்து வேலைசெய்தோம். “அந்தத் தொடர்பு விட்டுப் போகாமல் இருக்கவும் தமிழ் மீது ஆர்வமுள்ள இளையர்கள் தொடர்ந்து தமிழ்ப் பணி ஆற்றவும் இந்தச் சங்கம் தளத்தை ஏற்படுத்திக் கொடுத்து, ஊக்க மளிக்கிறது,” என்றார் திரு சுந்தர். கல்வி நிலையங்களுக்கு அப்பால் இளையர்களை இணைப் பதில் முன்னாள் மாணவர் சங்கங் களின் பங்கு முக்கியமான ஒன்றாகும்.

கடந்த மூன்றாண்டுகளாகச் செயல்பட்டு வரும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் மன்றத்தின் முன்னாள் மாணவர் சங்க இரண்டாம் செயற்குழு பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் ஆர்.ராஜாராம் (வலமிருந்து ஐந்தாவதாக அமர்ந்திருப்பவர்), செயலாளர் ரா.அன்பரசு (நடுவில் அமர்ந்திருப்பவர்), இந்திய மரபுடைமை நிலையத்தின் பொது மேலாளர் ச.சரவணன் (இடமிருந்து ஐந்தாவதாக அமர்ந்திருப்பவர்), என்டியு தமிழ் இலக்கிய மன்றத்தின் ஆலோசகர் பேராசிரியர் அல்ஃபோன்ஸ் (வலமிருந்து நான்காவதாக அமர்ந்திருப்பவர்) ஆகியோருடன் சங்கத்தின் உறுப்பினர்கள். படம்: முகமது ஜமீல்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆகஸ்ட் 30ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்ட உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும். படம், செய்தி: செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி

16 Sep 2019

நாடாளுமன்றத்தில் ஒருநாள்

அனைத்துலக அரங்கில் பல குத்துச்சண்டைப் போட்டிகளில் விக்னேஷ் பங்கேற்று பதக்கங்களும் வென்றுள்ளார்.

16 Sep 2019

உடற்பயிற்சி, ஊக்கம், உயர்ந்த சிந்தனை