ஆயுதப்படை வீரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சீருடை

சிங்கப்பூர் ஆயுதப்படை தனது வீரர்களுக்கு புதிய மேம்படுத்தப் பட்ட சீருடையை அறிமுகப்படுத்தி யுள்ளது. கடுமையான பயிற்சியில் ஈடுபட்ட பின் வியர்வையால் நனைந்துபோகும் சீருடையை விரைவில் காய்ந்துவிடும் வகையிலும் பயிற்சியால் ஏற்படும் உடற்சூட்டைக் குறைக்கும் வகையிலும் இந்தப் புதிய சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சீருடை, உடற்சூட்டால் ஏற்படும் காயங்களைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

முன்பு புழக்கத்தில் இருந்த நம்பர்4 என்றழைக்கப்படும் சீருடையின் முழுக்கைப் பகுதிகள் பச்சை வண்ணப் பனியனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தீப்பிடிக்காத செயற்கை நாரிழை யால் நெய்யப்பட்ட துணியாகும். நம்பர்4 சீருடையைக் காட்டிலும் 1.4 மடங்கு ஊடுருவும் தன் மையும் 1.6 மடங்கு விரைவில் காய்ந்துவிடும் தன்மையும் கொண் டது இப்புதிய சீருடை. எனவே தண்ணீர், காற்று, வியர்வை போன்றவை இந்தச் சீருடையில் தங்காது. காற்று உட்புகுந்து செல்லக்கூடியது என்பதால் பயிற்சியால் ஏற்படும் உடல்சூடு பரவலாக விரைவில் வெளியேறிவிடும்.

புதிய மேம்படுத்தப்படுத்தப்பட்ட சீருடையில் காட்சி தரும் ராணுவ வீரர் மூன்றாம் சார்ஜண்ட் ஸெங் ஸுடா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ்

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!