டிரம்ப்-கிம் சந்திப்பு: சிங்கப்பூருக்குக் கிடைத்த பெரும் விளம்பரம்

தமிழவேல்

செய்தி ஆசிரியர்

சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற டிரம்ப்-கிம் உச்சநிலை சந்திப்பின் அரசதந்திர முக்கியத்துவம், இந்த வட்டாரத்திலும் உலகத்திலும் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றையெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த அமெரிக்கா--வட கொரியா உச்சநிலை சந்திப்புச் சிங்கப்பூருக்கு எதிர்பாராமல் கிடைத்த மிகப் பெரிய விளம்பரம் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தச் சந்திப்புக்கான செலவுகள் $20 மில்லியன் எனப் பிரதமர் லீ சியன் லூங் கூறியிருந்தார்.

சிங்கப்பூர் ஏன் $20 மில்லியன் செலவிட்டு இந்தச் சந்திப்பை நடத்த வேண்டும் என்பது சிங்கப்பூரர்கள் சிலர் வருத்தப்பட்டுக்கொண்டனர். ஆனால் பொருளியல், வர்த்தக, விளம்பர நோக்கில் பார்த்தால் எஃப் 1 கார் பந்தயங்கள் போன்ற அனைத்துலக நிகழ்ச்சிகள் கூடப் பெற்றுத் தரமுடியாத விளம்பரத்தை $20 மில்லியன் பெற்றுத் தந்துவிட்டது.

முதலில் இந்த நிகழ்வு எந்த ஒரு குறிப்பிட்ட விளையாட்டையோ அல்லது ஒரு சில நாடுகளையோ சார்ந்தது அல்ல. உலக நாடுகள் அனைத்துமே ஆர்வம் கொண்டுள்ள, உலக அமைதிக்கான நிகழ்வு இது.

அடுத்து, இது சிங்கப்பூர் வலியச் சென்று கேட்டுக்கொண்ட ஒன்று அல்ல. இரு பெரும் நாடுகள் அமைதிப் பேச்சு நடத்த சிங்கப்பூர் வரலாம் என நினைக்கிறோம் என்று சொல்லும்போது, வேண்டாம்! வராதீர்கள்! என்று சொன்னால் அது சிங்கப்பூரின் நிலைப்பாட்டை, செயல்பாட்டை, திறனை எவ்வாறு பிரதிபலிக்கும்? சிங்கப்பூரால் இத்தகைய சந்திப்பை நடத்த முடியும் என்று எண்ணும் நம்பிக்கை என்னாவது?

மேலும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. உலகமே சுருங்கிவிட்டது. செய்திகளும் தகவல்களும் உடனுக்குடன் இணையத்தில் பறக்கின்றன. விமானப் போக்குவரத்தும் கட்டுப்படியாகி, அதிகமாகிவிட்டதால் செய்தியாளர்களால் உடனே ஓர் இடத்துக்குப் பறந்து சென்றுவிட முடியும். முன்பைவிட இன்று தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களும் இணைய செய்தி நிறுவனங்களும் இன்னும் ஏராளம்.

இவையே உலகின் பல நாடுகளையும் சேர்ந்த சுமார் 3,000 செய்தியாளர்களை இங்கு உடனே படையெடுக்கச் செய்துவிட்டன.

பல நாடுகளின் பிரதான செய்திகளில் இந்த நிகழ்வை மக்கள் பார்க்கும்போது டிரம்ப்-கிம் இருவரை மட்டும் அவர்கள் காண்பது இல்லை. தொலைக்காட்சியில் செய்தியாளர்களின் பின்னணியில் தெரியும் சிங்கப்பூரின் நகரம், அதன் கட்டடங்கள், அதன் எழில் பொங்கும் கடற்கரை, செந்தொசா தீவு ஆகையவைற்றையும் அவர்கள் பார்க்கின்றனர், பார்த்தனர்.

சிங்கப்பூரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், சுத்தமான சாலைகள், உயர் ரக ஹோட்டல்கள் போன்றவற்றையும் செய்தி படைப்பாளர்கள் அடிக்கடி செய்திகளில் கூறிக்கொண்டிருந்தனர்.

வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் மரினா பே, கரையோரப் பூந்தோட்டம் ஆகியவற்றில் நடந்து சென்று கண்டதையும் உலக மக்கள் பார்த்திருப்பர்.

மேலும் இங்கு வந்தவர்கள் சிங்கப்பூர் என்றால் என்ன, அதன் பொருளியல் என்ன, வளர்ச்சி திறன்கள் என்ன ஆகியவற்றைப் பற்றி செய்திகளை அள்ளிக் கொட்டின.

உலகின் உச்ச கட்ட இலக்குகளான இரு தலைவர்களே சந்திக்கச் சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்திருக்கும்போது, சிங்கப்பூர் பாதுகாப்புப் பற்றியும் இரண்டு மாதங்களில் இதை நிகழ்த்திவிட்ட சிங்கப்பூரின் செயல்திறன் பற்றியும் உலகம் அறிந்திருக்கும்.

இன்னும் சிங்கப்பூர் என்றால் சீனாவில் உள்ளது என்று எண்ணும் பல அமெரிக்கர்களையும் ஐரோப்பியர்களையும், ஆஸ்திரேயர்களையும் நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

எங்கும் சிங்கப்பூர், எதிலும் சிங்கப்பூர் எனக் கடந்த நான்கு நாட்களில் குறிப்பாக ஜூன் 12ஆம் தேதிக் கூகள் தேடலில் 'சிங்கப்பூர்' எனும் வார்த்தைக்கான தேடல் பன்மடங்கு அதிகரித்துள்ளது, குறிப்பாக அமெரிக்கர்களிடையே.

அனைத்துலக செய்தியாளர் நிலையத்தில் காலை, மாலை, இரவு என உணவுக்குப் பஞ்சமில்லை, சிங்கப்பூரின் 'கோழி சோறு' 'லக்ஸா' ஆகியவை தினமும் கிடைத்தன. 'யா குன்' காப்பிக் கடை தினுமும் காப்பி, டீ, ரொட்டி, முட்டை என வழங்கினர். மேலும் சில உள்ளூர் உணவுப் பொருட்கள் 3,000 செய்தியாளர்களிடம் நேரடியாக சென்றடைந்தன.

இவ்வளவு தகவல்களை உள்வாங்கிய உலக மக்களிடையே சிங்கப்பூர் மீதான ஆர்வமும் அதிகரித்திருக்கும். இதனால் அடுத்த முறை விமானம் வழி சிங்கப்பூர் வருபவர்கள், நம் நாட்டை மற்ற நாடுகளுக்குச் செல்லுமுன் கடந்து செல்லும் ஒரு விமான முனையமாக மட்டும் பார்க்கமாட்டார்கள். இங்கு தங்கி டிர்மப்-கிம் சுற்றிப்பார்த்த இடங்களையும் சுற்றிப்பார்த்து, சிங்கப்பூரின் உணவுகளையும் கலாசாரத்தையும் உள்வாங்கிச் செல்ல நினைப்பார்கள்.

$20 மில்லியன் செலவுக்கு அதைவிட 10 மடங்கு பலனும் கிடைத்துவிட்டது, சிறு தீவான சிங்கப்பூர் மூன்று நாட்களுக்கு உலகையே தன வசப்படுத்தியும் விட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!