வலுவான, ஆற்றல்மிக்க ஆயுதப்படை அவசியம்

சிங்கப்பூரின் சுயாதிபத்திய உரி மையையும் வாழ்க்கை வழியையும் பாதுகாக்க வலுவான, ஆற்றல்மிக்க சிங்கப்பூர் ஆயுதப்படை தேவை என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். அமெரிக்க அதிபருக்கும் வட கொரிய தலைவருக்கும் இடை யிலான உச்சநிலை சந்திப்பை சென்ற மாதம் சிங்கப்பூர் வெற்றிகரமான முறையில் நடத்த ஆயு தப்படை உதவியதைச் சுட்டிய அவர், அது தற்காப்பு ஆற்றலில் சிங்கப்பூர் கடந்த பல ஆண்டு களில் செய்துவந்துள்ள சீரான முதலீடுகள் மூலம் ஏற்பட்டு இருக்கும் நற்பலன் என மக்கள் பெருமை அடையலாம் என்றார்.

ஆயுதப்படை சிங்கப்பூரை தற்காக்க, சிங்கப்பூரர்களை பாது காப்பாக வைத்திருக்க முடியும் என்ற பொதுவான நம்பிக்கை, அதன் விளைவாக சிங்கப்பூரர்களிடையே ஏற்பட்டு இருக்கிறது என்று ஆயுதப்படை தினச் செய்தியில் அமைச்சர் கூறினார். சிங்கப்பூரை தற்காப்பதற்கான தங்களுடைய விசுவாசத்தையும் கடப்பாட்டையும் சேவையாளர்கள் ஆயுதப்படை தினத்தன்று மறு உறுதிப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஜூலை 1ஆம் தேதி ஆயுதப்படை தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஜூரோங் நகர மண்டபத்தில் நடந்த வருடாந்திர ஆயுதப்படை தின ஒட்டுமொத்த மறுஅர்ப் பணிப்பு நிகழ்ச்சியில் உரையாற் றிய டாக்டர் இங், இந்த நம்பிக் கைக்கு அதிநவீன சாதனங்கள் மட்டுமின்றி ஆயுதப்படை வீரர் கள் அதைவிட மிக முக்கிய காரணம் என்றார். சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற் சபை ஏற்று நடத்திய அந்த நிகழ்ச்சி, தீவு முழுவதும் நான்கு இடங்களில் நடந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அமைச்சர் ஒருவர் தலைமை தாங்கினார். சிங்கப்பூரை தற் காக்க ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அனைவரும் தங்கள் கடப்பாட்டை மறு உறுதிப்படுத்தினர். 2018-07-03 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!