சொந்த மண்ணில் மேன்யூ படுதோல்வி

மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு அதன் சொந்த விளையாட்டரங்கத்தில் ஸ்பர்ஸ் குழு விடம் நேற்று 3=0 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. யுனைடெட்டின் தற்காப்பில் உள்ள குறைபாடுகளையும் பலவீனங்களையும் ஆட்டத்தைப் பார்த்த அனைவரிடமும் ஸ்பர்ஸ் காட்டியது. ஸ்பர்ஸ் குழுவுக்காக இரண்டு கோல்கள் போட்டு லூக்கஸ் மோரா தமது அணியின் வெற்றிக்கு வித்திட்டார். முற்பாதி ஆட்டத்தில் கோல் ஏதும் போடப்படவில்லை. இடைவேளையின் போது இரு குழுக்களும் சமநிலையில் இருந்தன.

ஆனால் பிற்பாதி ஆட்டத்தில் நிலைமை மாறியது. ஏற்கெனவே கடந்த வாரம் நடைபெற்ற ஆட்டத்தில் பிரைட்டனிடம் யுனைடெட் 3-2 எனும் கோல் கணக்கில் வீழ்ந்திருந்தது. அதைக் கருத்தில் கொண்டு தமது அணியில் சில மாற்றங்களைச் செய்தார் யுனைடெட்டின் நிர்வாகி ஜோசே மொரின்யோ. தற்காப்பு ஆட்டக்காரர்கள் எரிக் பெய்லியும் விக்டர் லிண்டலோஃபும் நேற்றைய ஆட்டத்தில் களமிறங்க வில்லை. மூன்று தற்காப்பு ஆட்டக்காரர்கள் கொண்ட வியூகத்தை மொரின்யோ கையாண்டார். புயல் வேகத் தாக்குதல்களை நடத்தும் ஸ்பர்ஸ் குழுவிடம் இந்த வியூகம் எடுபடவில்லை. பிற்பாதி ஆட்டம் தொடங்கி ஐந்து நிமிடங்களில் ஸ்பர்ஸின் முதல் கோலை ஹேரி கேன் போட்டார். கார்னர் வாய்ப்பு மூலம் வந்த பந்தை தலையால் முட்டி கோலாக்கினார் கேன். இந்த அதிர்ச்சியிலிருந்து யுனைடெட் மீள்வதற்குள் அடுத்த இரண்டு நிமிடங்களில் ஸ்பர்ஸின் இரண்டாவது கோல் போடப்பட்டது.

ஸ்பர்ஸின் இரண்டாவது கோலைப் போட்டுக் கொண்டாடும் லூக்கஸ் மோரா (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!