உதயநிதிக்கு ஜோடியான கயல் ஆனந்தி

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்துக்கு ‘சைக்கோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடித்த ‘கண்ணே கலைமானே’ படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. இதில் உதயநிதி ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இதையடுத்து கே.எஸ். அதியமான், மிஷ்கின் இயக்கும் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் உதயநிதி. ‘தூண்டில்’, ‘பிரியசகி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே.எஸ்.அதியமான். அடுத்து திகில் கலந்த கதையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் உதயநிதி ஜோடியாக கயல் ஆனந்தியை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஓஎஸ்டி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இதையடுத்து மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’வில் நடிக்கிறார் உதயநிதி. வரும் 7ஆம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளது இப்படக்குழு.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘சிக்ஸர்’ படத்தின் இயக்குநர் சாச்சியின் சகோதரி சிந்துவை நடிகர் மணந்துள்ளார். படம்: ஊடகம்

13 Dec 2019

நடிகர் சதீஷ் திருமணம்: சிவகார்த்திகேயன் தம்பதியர் நேரில் வாழ்த்து
தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்‌ரேயா நடிக்கும் படம் ‘சண்டக்காரி’. இந்தப் படம் பெரியளவில் வெற்றி பெறும் என்று நம்புகிறாராம். அதன் பிறகு தமிழில் மீண்டும் வெற்றி வலம் வருவேன் என்றும்  அவர் சொல்கிறார். படம்: ஊடகம்

தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்‌ரேயா நடிக்கும் படம் ‘சண்டக்காரி’. இந்தப் படம் பெரியளவில் வெற்றி பெறும் என்று நம்புகிறாராம். அதன் பிறகு தமிழில் மீண்டும் வெற்றி வலம் வருவேன் என்றும்  அவர் சொல்கிறார். படம்: ஊடகம்

13 Dec 2019

போலிசாரிடம் ‘சிக்கிய’ ஸ்‌ரேயா

‘50/50’ படத்தில் யோகிபாபு, ராஜேந்திரன், ஜான் விஜய்.

13 Dec 2019

புதுப்படத்தில் யோகி பாடிய ‘கோலமாவு கோகிலா’ பாடல்