சுடச் சுடச் செய்திகள்

மாணவியைச் சீரழித்த 17 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

சென்னை: பள்ளி மாணவியைச் சீரழித்த 17 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வரும் வாய் பேச முடியாத 12 வயதுப் பள்ளிச் சிறுமியை அதே குடியிருப்பில் வேலை பார்த்து வரும் காவலாளி உள்ளிட்ட 17 பேர் சீரழித்த தாகப் புகார் எழுந்தது. இதையடுத்து 17 பேரும் கைதாகினர். சிறையில் அடைக்கப்பட்ட பின் நடந்த அடையாள அணிவகுப் பின்போது தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்திய 17 பேரையும் பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காண்பித்தார். இதையடுத்து 17 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.