எரிவாயு சட்ட திருத்தம் பரிந்துரை

நாட்டின் எரிவாயு விநியோகத்தில் பற்றாக்குறை அல்லது தடைகள் ஏற்படும் ஆபத்தைத் தவிர்ப்ப தற்கான பாதுகாப்பு நடவடிக்கை களை எரிசக்தி துறையிலுள்ள நிறுவனங்கள் மேற்கொள்வதை எரிசக்தி சந்தை ஆணையம் விரைவில் உறுதிப்படுத்த முடியும். எரிவாயு சட்டத்தில் செய்யப் பட வுள்ள பல திருத்தங்கள் நேற்று நாடாளுமன்றத்தில் முதல் வாசிப் பில் இடம்பெற்றன. கடந்த 2001ல் உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம், இந்த தொழில் துறைக்கு போட்டித் தன்மையான சந்தைக் கட்டமைப்பை உருவாக்கியதுடன், எரிவாயுவை விற் பதற்கும் எடுத்துச்செல்வதற்கும் பாதுகாப்புகளை வழங்கியது.

ஜூன் மாதத்தில் வர்த்தக தொழில் அமைச்சு, பொது கருத்தாய்வு அறிக்கையில் எரிசக்தி சந்தை ஆணையம், அவசரநிலைகளில் மட்டுமே மேம்படுத்தப்பட்ட வழிகாட்டி நடைமுறைகளை வெளியிடும் என்றும் பாதிக்கப்பட்ட தரப் பினருக்கு சுயேட்சையான விற்பனை விலைக் குழு நிர்ணயம் செய்யும் என்று குறிப்பிட்டது. வர்த்தக தொழில் அமைச்சின் அனுமதியைப் பெற்ற பின்னரே நடவடிக்கை எடுக்கலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்

13 Nov 2019

'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

‘ஸ்டூண்ட்- ரன் பார்க்’ நடவடிக்கையில் சுமார் 40 மாணவர்கள் ஈடுபட்டனர். வகுப்பில் கற்றவற்றை நடைமுறைப்படுத்திப் பார்த்ததுடன் பல்வேறு புதுமைகளையும் அவர்கள் கையாண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

மாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது