பிக்சல்3 திறன்பேசிகள் நவம்பரில் அறிமுகம்

கூகல் நிறுவனம் தனது புதிய பிக்சல் 3, பிக்சல் 3XL ஆகிய இரண்டு திறன்பேசிகளை நவம்பர் 1ஆம் தேதி அறிமுகப்படுத்த வுள்ளது. இதனை அந்நிறுவனம் நேற்று அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் தனது நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்தது. இந்தத் திறன்பேசிகள் சிங் கப்பூர் உள்ளிட்ட 13 நாடுகளில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இவற்றின் விலைகள்: பிக்சல் 3XL (6.3") - 64 ஜிபி S$1,399, 3XL(6.3") (128 ஜிபி) S$1.549. பிக்சல் 3 (5.5") = 64 ஜிபி S$1,249, பிக்சல் 3 (5.5") = 128 ஜிபி S$1,399. மூன்று வண்ணங்களில் கிடைக் கும் இந்தத் திறன்பேசி களை வாங்க சிங்கப்பூர் கூகல் ஸ்டோரில் முன்பதிவு செய்யலாம். சென்ற முறை கூகலின் பிக்சல் திறன்பேசிகளை சிங்டெல் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே வாங்க முடிந்தது. இந்த முறை ஸ்டார்ஹப், சிங் டெல் ஆகிய இரண்டு தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களிடம் இருந்தும் ஒப்பந்த முறையில் வாங்கலாம்.

தொலைத்தொடர்புச் சேவை வழங்கும் நிறுவனங் களின் பிக்சல் 3 திறன்பேசிகளுக்கான விலையை அறிமுக நாளுக்கு முன்னதாக எப்போதும் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்சல் 3XL, பிக்சல் 3 ஆகிய இரண்டு திறன்பேசிகளும் அள வில் தான் மாறுபட்டவையே தவிர, ஒரே மாதிரியான செயல்பாடுகளைக் கொண்டவைதான். இவற்றின் தொடுதிரை 'Oled' தொழில்நுட்பத்தில் ஆனவை. இதுபோன்ற தொடுதிரை தொழில் நுட்பம் ஏற்கெனவே சாம்சுங், ஆப்பிள் திறன்பேசிகளில் பயன்ப டுத்தப்பட்டுள்ளன.

இத்தொலைபேசிகளின் புகைப் படக்கருவிகள் 12.2 மெகா பிக்ச லைக் கொண்டவை. இவற்றில் எடுக்கப்படும் புகைப்படங்கள் தெள்ளத்தெளிவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. புகைப்படங்கள் தரமாக இருக் கும் வகையில் கூகல், பிக்சல்3 திறன்பேசிகளுக்காக பிரத்யேக மாக சில்லு மற்றும் மென் பொருளை த் தயார் செய்து இணைத்துள் ளது. இந்த மென்பொருள், இடம், நேரம், தட்பவெட்ப நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப புகைப் படக்கருவியைச் சரிசெய்து சிறப் பான படங்களைப் பிடிக்க உதவு கிறது.

இந்தத் திறன்பேசியில் இன் னொரு சிறப்பு அம்சத்தையும் கூகல் சேர்த்துள்ளது. அதாவது திறன்பேசியின் முன் பகுதியில் உள்ள புகைப்படக்கருவியைக் கொண்டு விரிவான அளவில் 'தம்படம்' (செல்ஃபி) எடுத்துக் கொள்ளலாம். மற்ற திறன்பேசி களில் இல்லாத வகையில் இந்தத் திறன்பேசிகளின் புகைப்படக்கருவிகள் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது என்கிறார் 'கவுண்டர் பாய்ண்ட் டெக் னாலஜி' நிறுவனத்தின் இயக்குநர் திரு தருண் பதக். ஆண்ட்ராய்ட் 9 Pie என்னும் இயக்க மென்பொருளில் இயங்கும் கூகலின் பிக்சல் 3 விற்பனைக்கு வந்தபிறகு இதன் வாடிக்கை யாளர்கள் கணிசமாகக் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்சல் 3 திறன்பேசிகளுடன் பிக்சல் ஸ்லேட் என்னும் டேப்லெட் ஒன்றையும் கூகல் அறிமுகப்ப டுத்துகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!