‘லயன் ஏர்’ விபத்து; விமானத்தின் வலுவான பாகங்களும் உடைந்து சிதறின

ஜகார்த்தா: ஜாவா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கிய ‘லயன் ஏர்’ விமானத்தின் மிகவும் உறுதியான பாகங்கள்கூட உடைந்து சிதறியுள் ளன என்று இந்தோனீசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழு தெரிவித்தது. அக்டோபர் 29ஆம் தேதி ஜகார்த்தாவிலிருந்து பங்கல் பினாங்கை நோக்கி பறந்த விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் இறந்தனர். “கடல் மட்டத்தின் மீது விமானம் அதிவேகத்தில் மோதியதை விமானத்தின் உடைந்த பாகங்கள் காட்டுகின்றன,” என்று இந்தோனீசிய தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவர் சோர்ஜான்டோ ஜாஜோனோ குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியிருக்கலாம் என்று நம்பப்பட்டது. “விமானம் நடுவானில் வெடித்துச் சிதறுவதற்கு வாய்ப்பில்லை. மோதும்போது விமானத் தின் இயந்திரம் அதிவேகத்தில் இயங்கியது,” என்றார் அவர். கடந்த திங்கட்கிழமை அன்று விமானத்துறையைச் சேர்ந்த மூன்று நிபுணர்கள், விபத்துக் குள்ளான ‘லயன் ஏர்’ நிறுவனத் தின் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானம் மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் கடலுக்குள் பாய்ந்திருக்கலாம் என்று கூறியிருந்தனர். ஆனால் இதுவரை இது உறுதிப்படுத்தப் படவில்லை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இதுவரை மன்னார் கல்லறைப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வுப் பணியின்போது கிடைக்கப்பெற்ற 300க்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகளில் 23 எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையது என்று அகழ்வுப் பணிக்கு பொறுப்பு வகிக்கும் டாக்டர் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். படம்: ஊடகம்

17 Jan 2019

மன்னாரில் 300 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே (இடமிருந்து மூன்றாவது) முன்வைத்த பிரெக்சிட் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஏற்க மறுத்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

17 Jan 2019

சூடுபிடிக்கும் பிரெக்சிட் விவகாரம்