பொருளியல் இரும்புத் திரை: ஹென்றி பால்சன் எச்சரிக்கை

அமெரிக்காவின் முன்னாள் நிதி அமைச்சர் ஹென்றி பால்சன், அமெரிக்காவும் சீனாவும் வர்த்தகப் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லையென்றால் பொருளியல் இரும்புத் திரையால் மூடப்படும் அபாயமுள்ளது என்று எச் சரித்துள்ளார். சீனாவின் பல ஆண்டுகால நியாயமற்ற வர்த்தகத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செயல்படுவதால் வா‌ஷிங் டனும் பெய்ஜிங்கும் எதிரும் புதிரு மாக போட்டியிட்டு வருகின்றன. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் வரிகளை விதித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக சீனாவும் அமெரிக்காவின் பொருட்களுக்கு வரி விதித்து வருகிறது.

இந்நிலையில் சிங்கப்பூரில் பேசிய ஹென்றி பால்சன், வா‌ஷிங் டனுக்கும் பெய்ஜிங்குக்கும் இடையிலான பொருளியல் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்றார். "இதுவரைக்கும் நல்ல ஆரோக் கியமான போட்டித்தன்மையுடன் செயல்பட்டு வந்த இந்த வட்டாரம் இனி முழு வீச்சிலான பனிப்போர் நிலைக்கு மாறுவதை நாம் கவலை யுடன் எதிர்கொள்ள வேண்டியுள் ளது," என்று முன்னாள் குடியரசுக் கட்சி அதிபரான ஜார்ஜ் டபிள்யூ புஷ்‌ஷின் கீழ் பணியாற்றிய ஹென்றி பால்சன் கூறினார்.

கடந்த 2016ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் தற்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு எதிராக போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹில்லரி கிளின்டனை திரு ஹென்றி பால்சன் ஆதரித்தார். தொடர்ந்து பேசிய அவர், "அமெரிக்கா-சீனா பொருளியல் ஒத்துழைப்பு என்பது தற்போது நேர்மாறான திசையில் செல்வதைப் போல தோன்றுவதால் பெரும் அளவில் பொருளியல் பாதிப்புகள் ஏற்படலாம்," என்றும் எச்சரித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!