மின்னிலக்கத் தொகுப்பாக சிங்கப்பூரின் தமிழிசை

வைதேகி ஆறுமுகம்

சிங்கப்பூரில் இசை வரலாற்றை ஆவணப்படுத்தி, பாதுகாத்து தமிழ் மொழியையும் கலாசாரத் தையும் எதிர்காலச் சந்ததிக்கு எடுத்துக்கூறும் பெரும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழ் மின்மரபு டைமைத் திட்டக்குழு. தமிழ் மொழி, இலக்கிய, நாடக வரலாறுகளை மின்னிலக்கப் படுத்தி பாதுகாக்கும் முயற்சி களைத் தொடர்ந்து, திரு அருண் மகிழ்நன் வழிகாட்டுதலில் சிங்கப்பூர் தமிழ் இசை மின் தொகுப்புத் திட்டம் சென்ற ஆண்டு தொடங்கப்பட்டது.

தமிழ் மின்மரபுடைமைத் திட்டக் குழு, தேசிய நூலக வாரியம் ஆகியன இணைந்து இத்திட்டத் திற்காக 10 அமைப்புகளிடமிருந்தும் 15 தனி நபர்களிடமிருந்தும் தமிழ் பாரம்பரிய இசையின் வரலாற்றை விவரிக்கும் மொத்தம் 800 ஒலிப் பகுதிகள், ஒலி-ஒளிப் பதிவுகள், சஞ்சிகைகள், புகைப்படங்கள் ஆகியவற்றைச் சேகரித்து மின் னிலக்கப்படுத்தின. சேகரிக்கப்பட்ட பதிவுகள் நேற்று தேசிய நூலக வாரியத்தில் அதிகாரத்துவத் துவக்கம் கண்டது.

நிகழ்ச்சியில் தமிழ் இசை முன் னோடியான திருமதி விஜயலட்சுமி பாலகிருஷ்ண ஷர்மா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். முதல் இரண்டு முயற்சிகளைப் பற்றி விவரித்த தேசிய நூலகத் தமிழ் மொழி சேவைப் பிரிவின் தலைவரான திரு அழகிய பாண்டியன், “சிங்கப்பூரின் பொன் விழாவையொட்டி 1965 முதல் 2015 வரையில் சிங்கப்பூரர்களாலும் நிரந்தரவாசிகளாலும் எழுதப்பட்ட கிட்டத்தட்ட 350 இலக்கிய நூல்கள் மின்னிலக்கப்படுத்தப்பட் டன,” என்றார். “கவிதை, சிறுகதைகள் என பல இலக்கிய நூல்களைக் கொண்ட அந்தத் தொகுப்பை சிங்கப்பூருக்கு இந்திய சமூகம் பரிசாக வழங்கியது,” என அவர் குறிப்பிட்டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விலங்கியல் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் குடும்ப தினக் கொண்டாட்டத்தில் யானைகளைக் கண்டு மகிழும் தொண்டூழியர்கள். தொண்டூழியர்கள், அவர்களது குடும்பத்தினர் என கிட்டத்தட்ட 2,000 பேர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

23 Jun 2019

தொண்டூழியர்களை சிறப்பித்த கொண்டாட்டம்

மோட்டார் சைக்கிள் பயணம் செய்த வீரர்கள்: எஸ். பாலச்சந்திரன், 56, ப. பன்னீர்செல்வம், 54, ஆ. அருணகிரி, 53

23 Jun 2019

மோட்டார்சைக்கிளில் ஒன்பது நாடுகள் 

துயில் நாடகத்தில் ஜனனி இடம்பெறும் ஒரு காட்சி. படம்: SITFE

23 Jun 2019

தூக்கம் பற்றி துடிப்போடு பேசும் ‘துயில்’