முன்னோடித் தலைமுறையினரை கொண்டாடும் புகைப்பட கண்காட்சி

சிங்கப்பூரில் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் கால் பதித்து அடுத்த ஆண்டோடு 200 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அதனை நினைவுகூரும் வகையில் புகைப்படக் கண்காட்சி ஒன்றிற்குச் சிங்கப்பூரின் இரு நூறு ஆண்டு நிறைவு அலுவல கத்தின் ஆதரவோடு நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபு டைமை நிலையம் ஏற்பாடு செய் துள்ளது. ‘சிங்கப்பூரில் இருந்து சிங்கப் பூரர்-முன்னோடித் தலைமுறையி னர் மற்றும் சந்ததியினர்’ என்ற தலைப்பில் நடைபெறவுள்ள கண் காட்சியில் 100 புகைப்படங்கள் இடம்பெறவுள்ளன.

இதற்காகத் தற்கால சந்ததி யினர் அவர்களின் தற்போதைய படத்தோடு சிங்கப்பூருக்கு முத லில் வந்த தங்களது மூதாதைய ரின் (1965க்கு முன்) படத்தையும் விவரங்களையும் பகிர்ந்து கொள்ள நிலையத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். அத்தகைய புகைப்படங்களை இம்மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் மின்பிரதி எடுக்க நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அல்லது மின்பிரதி எடுக்கப்பட்ட படங்களை வரும் 30ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு 96524721 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.