சுடச் சுடச் செய்திகள்

US$33 பில்லியன் அந்நிய முதலீட்டை திரட்ட தமிழக அரசு தீவிர முயற்சி

தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் ஏழைகளுக்கு 500,000 வீடுகளைக் கட்டவும் தமிழக அரசு இஸ்லாமிய சுயாதிபத்திய நல நிதி மூலம் US$33 பில்லியன் முதலீட்டை திரட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளது. உலக இஸ்லாமிய பொருளியல் கருத் தரங்கு மற்றும் ஐக்கிய பொருளியல் அரங்கம் ஆகிய அமைப்புகளின் வர்த்தகச் சபை வட்டமேசை மாநாடு-2018, சனிக் கிழமை சென்னையில் நடந்தது. அதில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல் வம் உரையாற்றினார்.

இந்த இரண்டு அமைப்புகளும் தமிழ் நாட்டிற்காக US$33 பில்லியன் தொகை முதலீட்டை திரட்டித்தர இலக்கு நிர்ண யித்து இருப்பதாக அவர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசாங்கம் மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்காக ‘தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி நிர்வாக நிறுவனம்’ என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த அமைப்பு US$350 மில்லியனைத் திரட்டி இருக்கிறது. இந்த நிறுவனம் மேலும் வெளிநாட்டு முதலீடுகளைக் கவர திட்டமிட்டு இருப்பதாகவும் திரு பன்னீர் செல்வம் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி, தமிழ்நாடு வீட்டு வசதி நிதி ஆகிய இரு நிதியங்களுக்கும் வெளிநாடுகளிலிருந்து பெரிய அளவில் முதலீடுகள் வரவேற்கப் படுவதாக அறிவித்து அதற்கான முயற்சி களை தமிழக அரசு தீவிரமாக்கியுள்ளது. மாநிலத்தில் 500,000 மக்களுக்கு வீடுகளைக் கட்ட அரசாங்கம் திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்கு US$60 பில்லியன் தேவைப்படுவதாகவும் தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்தின் செயலாளர் எஸ் கிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆகையால் இந்த நிதியில் முதலீடு செய்யும்படி முதலீட்டாளர்களை அவர் வலியுறுத்தினார். மாநிலத்தில் முதலீடு செய்யும்படி முத லீட்டாளர்களை அந்தக் கூட்டத்தில் தமிழ் நாட்டின் தொழில்துறை அமைச்சரும் கேட்டுக்கொண்டார். ஐக்கிய பொருளியல் அரங்கின் வர்த் தக சபை தலைவர் ஆரிஃப் புகார் ரஹ் மான், மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரான துன் மூசா ஹித்தாம் ஆகி யோரும் அந்தக் கூட்டத்தில் உரையாற்றி னர். திரு மூசா ஹித்தாம், உலக இஸ் லாமிய பொருளியல் அரங்க அறநிறுவனத் தின் தலைவராக இருக்கிறார்.

தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது ஆகப்பெரிய பொருளியலாகத் திகழ்கிறது என்றும் அது US$230 பில்லியனிலில் இருந்து US$600 பில்லியன் பொருளிய லாக உருவெடுக்க இருக்கிறது என்றும் இவர்கள் தெரிவித்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon