‘ஸ்பைஸ்’ உணவக சாப்பாட்டை உண்டவர் கவலைக்கிடம்

‘ஸ்பைஸ்’ உணவகத்தின் உணவைச் சாப்பிட்ட ‘செட்ஸ்’ நிறுவன அதிகாரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மோசமான நிலையில் இருக்கிறார். தீபாவளிக் கொண்டாட்டத்தில் நவம்பர் ஆறாம் தேதி அன்று கலந்துகொண்டு ‘ஸ்பைஸ்’ உணவகம் வழங்கிய உணவை இவர் சாப்பிட்டதாகவும் அதனால் நுரையீரல், சிறுநீரகப் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார் என்றும் அறியப்படுகிறது.

‘ஸ்பைஸ்’ உணவகத்தின் சாப்பாட்டை உண்டு பாதிக்கப்பட்ட 49 பேரில் 21 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்குப் பாதிக்கப்பட்டனர். இதனால் உணவகம் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் உணவகத்தின் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் ‘ஸ்பைஸ்’ உணவகத்தின் உரிமையாளர்களில் ஒருவரான திரு ஹரேஷ் சப்னானி ஃபேஸ்புக் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்