எஜமானரின் வரவை எதிர்பார்த்து 80 நாட்களாக காத்திருக்கும் நாய்

பெய்ஜிங்: சீனாவுக்கு சொந்தமான மங்கோலியா பகுதியில் ஒரு வீட்டின் உரிமையாளர் சாலை விபத்தில் இறந்தது தெரியாமல் அவர் வரவை எதிர்பார்த்து அவரது செல்லப்பிராணியான நாய் கடந்த 80 நாட்களாக விபத்து நிகழ்ந்த இடத்தில் காத்திருப்பதாக சைனா நியூஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கும் அந்த நாய் யார் விரட்டி விட்டாலும் மீண்டும் அந்த இடத்திற்கு வந்துவிடுவதாக டாக்சி ஓட்டுநர்கள் கூறியுள்ளனர்.