ஆசியான் தலைமைப் பொறுப்பை தாய்லாந்து ஏற்றது

ஆசியான் தலைமைப் பொறுப்பை நேற்று தாய்லாந்திடம் சிங்கப்பூர் ஒப்படைத்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பொறுப்பு மீண்டும் தாய்லாந்திடம் சென் றிருக்கிறது. தாய்லாந்து 2019 ஜனவரி 1 முதல் ஆசியான் தலைமைப் பொறுப்பின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளும். ஓராண்டு காலம் அந்தப் பொறுப்பை அது வகிக்கும்.

ஆசியான் சமூகத்தை மீள்திறன் மிக்கதாக, புத்தாக்கத்துடன் கூடியதாக ஆக்குவதற்கு ஆற்றல்மிக்க வழிகளில் முயற்சிகளை சிங்கப்பூர் மேற்கொண்ட தற்காக பிரதமர் லீ சியன் லூங்கை தாய் லாந்துப் பிரதமர் பிரயுத் சான் ஒ சா பாராட் டினார். நன்றியும் தெரிவித்தார். ஆசியானின் தலைமைப் பொறுப்பை இதற்கு முன் சிங்கப்பூரிடமிருந்து 2008ல் தாய்லாந்து ஏற்றிருந்தது. இப்போது ஆசியானுக்கு ஓராண்டு காலம் தலைமை ஏற்கவிருக்கின்ற தாய்லாந்து, தனது தலைமைத்துவப் பணிக்கான கருப் பொருளை வெளியிட்டது.

'பொருளியல் வளத்துடன் இயற்கை வளத்தையும் கட்டிக்காப்பதற்குப் பங்காளித்துவ உறவை மேம்படுத்துவோம்' என்பதே அந்தக் கருப்பொருள். சிங்கப்பூரில் சன்டெக் சிங்கப்பூர் அனைத்துலக மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் நடந்த 33வது ஆசியான் உச்சநிலை மாநாட்டு முடிவில் அந்தக் கருப்பொருளைத் தாய்லாந்துப் பிரதமர் வெளியிட்டார். ஆசியான் மீள்திறனுடனும் புத்தாக்கத்துடனும் திகழவும் வலுவான ஆதரவு அளித்த ஆசியான் உறுப்பு நாடு களுக்குப் பிரதமர் திரு லீ நன்றி தெரி வித்தார்.

ஆசியானை மையமாகக்கொண்ட கட்டமைப்பை நாம் மேம்படுத்த வேண் டும் என்று குறிப்பிட்ட அவர், நம்முடைய பங்காளி நாடுகளை ஈடுபடுத்தி இந்த வட்டாரத்தைத் தாராளமயமான, எல்லாரை யும் உள்ளடக்கக்கூடிய பகுதியாக வைத் திருக்கவேண்டியதும் முக்கியம் என்றார். பொருளியல் ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து பலப்படுத்தி, ஆற்றல் வளங் களைத் திரட்டி மக்களின் வாழ்வை மேம் படுத்த வேண்டும். வட்டார அளவில் தொடர்ந்து சிந்தித்து ஆசியான் திட்டங் களில் அரசியல் முதலீடுகளைத் தொடர வேண்டும் என்றும் பிரதமர் லீ கேட்டுக் கொண்டார். ஐக்கியத்தின் அடிப்படையி லும் பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரி யாதை, பரஸ்பர நன்மை ஆகிய கோட்பாடு களின் அடிப்படையிலும் இன்னும் அணுக்கமாகச் சேர்ந்து செயல்படும்படி ஆசியான் உறுப்பு நாடுகளைத் தாய்லாந்து பிரதமர் கேட்டுக் கொண்டார். 2018-11-16 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!