நேப்போலிக்கு எதிரான வாழ்வா சாவா நிலை

பாரிஸ்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் குழுவிடம் 2=1 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் தோல்வியைத் தழுவி உள்ளது. லிவர்பூலுக்கு எதிராக ஜுவான் பேனார்ட்டும் நெய்மாரும் கோல்களைப் போட்டனர். இதன் விளைவாக சாம்பியன்ஸ் லீக் போட்டியின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்குத் தகுதி பெற அடுத்த மாதம் இத்தாலியின் நேப்போலியுடனான ஆட்டத்தில் லிவர்பூல் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அடுத்த மாதம் 11ஆம் தேதியன்று லிவர்பூலின் ஆன் ஃபீல்ட் விளையாட்டரங்கத்தில் இந்த முக்கியமான ஆட்டம் நடைபெறுகிறது.

வாழ்வா சாவா என்ற நிலையில் நேப்போலிக்கு எதிரான ஆட்டத் துக்காக மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார் லிவர் பூலின் நிர்வாகி யர்கன் கிளோப். நேப்போலியை வலிமைமிக்க குழு என்று வர்ணித்த கிளோப், அக்குழுவுக்கு எதிராக தமது வீரர்கள் மிகவும் சிறப்பாக விளை யாட வேண்டும் என்று தெரி வித்தார். சொந்த மண்ணில், சொந்த ரசிகர்கள் ஒன்று கூடி லிவர் பூலுக்கு பேராதரவு தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மற்றோர் ஆட்டத்தில் இத்தாலியின் இன்டர் மிலானை 1=0 எனும் கோல் கணக்கில் ஸ்பர்ஸ் குழு தோற்கடித்தது. இதன் மூலம் காலிறுதிக்கு முந்திய ஆட்டத்துக்குத் தகுதி பெறும் வாய்ப்பை ஸ்பர்ஸ் வலுப்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் 80வது நிமிடத் தில் கிறிஸ்டியன் எரிக்சன் அனுப் பிய பந்து வலையைத் தீண்டியதும் ஸ்பர்ஸ் குழு கொண்டாட்ட மழையில் மூழ்கியது. ஸ்பர்ஸ் அதன் அடுத்த ஆட்டத்தில் பார்சிலோனாவைச் சந்திக்கும்.

தமது அபாரத் திறனைப் பயன்படுத்தி லிவர்பூல் வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி பந்தை மின்னல் வேகத்தில் கோல் வலை நோக்கி எடுத்துச் செல்ல முயற்சி செய்யும் பாரிஸ் செயிண்ட் ஜெர்மேனின் நட்சத்திர வீரர் நெய்மார் (வலமிருந்து இரண்டாவது). படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!