‘வெற்றி பெறவேண்டும் என்ற வெறி இல்லை’

சௌத்ஹேம்டன்: அவமானகரமான தோல்வியைத் தவிர்த்தாலும் மான் செஸ்டர் யுனைடெட் வீரர்களிடம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆவேசம் இல்லை என்று கூறியுள் ளார் அதன் நிர்வாகி மொரின்யோ. முதலில் கோட்டைவிட்டு விட்டு பின்னர் ஆட்ட நேரம் முழுவதும் அதைச் சரிக்கட்டுவதையே மான் செஸ்டர் யுனைடெட் வீரர்கள் இப் பருவத்தில் வழக்கமாக கொண் டுள்ளார்கள். இது நேற்று அதிகாலை நடந்த சௌத்ஹேம்டன் குழுவிற்கு எதி ரான பிரிமியர் லீக் ஆட்டத்திலும் தொடர்ந்தது. முதல் 20 நிமிடத்தில் 2 கோல் கள் போட்டு முன்னிலை கண்டது சௌத் ஹேம்டன். ஆம்ஸ்ட்ராங், செட்ரிக் சோர்ஸ் இருவரும் போட்ட அந்த கோல் களால் ஆட்டம் சௌத்ஹேம்ட னின் கட்டுக்குள் சென்றது. நீண்ட நேரம் சௌத்ஹேம்டன் வீரர் மாயா யோ‌ஷிதாவின் கட் டுப்பாட்டிற்குள் இருந்து பந்தை மார்கஸ் ரேஷ்ஃபர்ட் தட்டிப்பறிக்க ஆட்டம் மேன்யூ வசப்பட்டது.

ரேஷ்ஃபர்ட் பறித்த பந்தை வலைக்குள் தள்ளி 33வது நிமிடத் தில் கோலாக்கினார் ரொமேலு லுக்காகு. தொடர்ந்து அதிரடி காட்டிய ரேஷ்ஃபர்ட் எதிரணியின் மூன்று தற்காப்பு ஆட்டக்காரர்களைத் தாண்டி பந்தைச் சக வீரரான ஹெரேராவிடம் அனுப்பினார். 39வது நிமிடத்தில் ஹெரேரா, அதைக் கோலாக்கி முற்பாதி நேரத்திலேயே ஆட்டத்தைச் சமன் செய்தார். பிற்பாதி நேரத்தில் போக்பாவின் கோல் முயற்சி பலனளிக்காத நிலையில் ஆட்டம் 2-2 சமநிலை யில் முடிந்தது.

ரெலிகேஷன் நிலையில் உள்ள ஒரு குழுவை வெற்றி கொள்ள முடியாத மேன்யூ வீரர்களின் ஆட்டம் மிக மோசமானது என்று ரசிகர்கள் சாடி வருகின்றனர். ஆட்டத்திற்குப் பிறகு பேசிய மொரின்யோ, “ரேஷ்பர்ட்டிடம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆவேசம் இருந்தது. பந்தைக் தங்கள் வசப்படுத்த வெற்றி பெற வேண்டும் என்ற வெறி உணர்ச்சி வேண்டும். ஆனால் பெரும்பாலான மேன்யூ வீரர்களிடம் அந்த உணர்ச்சி இல்லை.

“அதேசமயம் ஆவேசம் உடைய மேன்யூ வீரர்கள் சிலர் காயம் கார ணமாக இன்னும் இரண்டு வாரங் களுக்கு விளையாட முடியாத சூழ் நிலை உள்ளது,” என்றார்.

மான்செஸ்டர் யுனைடெட் வீரர் பால் போக்பாவின் கோல் போடும் முயற்சி பலனளிக்காத நிலையில், ஆட்டம் 2-=2 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது. படங்கள்: இபிஏ

இப்பகுதியில் மேலும் செய்திகள்