‘ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்தியாவிற்கு நல்ல வாய்ப்பு’

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வீழ்த்த இந்தியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக ஆஸ்தி ரேலிய முன்னாள் அணித் தலை வர் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி வரு கிற 6ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லாத நிலையில், இந்த டெஸ்ட் தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவ் வாக் இணையத் தளத்துக்கு அளித்த பேட்டியில், "ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணி தன்னை நல்ல முறையில் தயார்ப்படுத்தியுள்ளது.

இதனால் இந்திய அணிக்குக் கணிசமான வாய்ப்பு இருக்கிறது. "இந்த டெஸ்ட் தொடர் உண் மையிலேயே மிகுந்த பரபரப்புடன் இருக்கும் என்று நினைக்கிறேன். "டெண்டுல்கர், லாராவைப் போன்று கோஹ்லியும் மிகச் சிறந்த பந்தடிப்பாளர். "இந்த டெஸ்ட் தொடரில் யார் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்," என்று ஸ்டீவ் வாக் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட், "கோஹ்லி உலகின் சிறந்த பந்தடிப்பாளர் என்பதில் சந்தேகமில்லை. இத னால் இந்தியா அதிக ஓட்டங் களைக் குவிக்கும். "அதே நேரத்தில் ஆஸ்திரே லியாவின் வேகப்பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வர்கள். அவர்கள் திறமை வாய்ந்த வேகப்பந்து வீரர்கள்," என்று சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!