சுசுகி கிண்ண அரையிறுதி: வியட்னாம் வெற்றி

பக்கலோட்: பிலிப்பீன்ஸ் காற் பந்துக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான சுவென் கோரன் எரிக்சன் தமது முதல் தோல்வியைச் சந்தித்துள்ளார். பிலிப்பீன்சின் பக்கலோட் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏஎஃப்எஃப் சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் வியட்னாம் குழு பிலிப்பீன்சை 2=1 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது. அந்நிய மண்ணில் கிடைத்த இந்த வெற்றியின் மூலம் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வலுவான நிலையில் உள்ளது வியட்னாம். ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் வியட்னாமின் தா க் கு த ல் ஆட்டக்காரர் நுவென் ஆன் டுக் தலையால் முட்டிய பந்து வலைக்குள் பாய்ந்து கோலானது. இந்நிலையில், ஆட்டம் இடை வேளையை நெருங்கும் வேளையில், ‘கார்னர் கிக்’ மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திய பிலிப் பீன்சின் பேட்ரிக் ரெய்ச்செல்ட், கோல் கம்பத்தில் அருகிலிருந்து லாவகமாக பந்தைத் தட்டி கோலடித்தார். இதனால், முதல் பாதியில் ஆட்டம் 1-1 என்று சம நிலையில் முடிந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கிய மூன்று நிமிடங்களில், வியட்னாம் மறுபடியும் முன்னிலை வகித்தது. பிலிப்பீன்சின் பெனால்டி எல்லையில் தம்மிடம் வந்த பந்தை ஆட்டக்காரர் ஃபான் வேன் டுக் கட்டுப்படுத்தி பிலிப்பீன்ஸ் கோல்காப்பாளரின் கைக்கு எட்டாத தூரத்தில் பந்தை உதைத்து கோலடித்தார். அதையடுத்து ஆட்டத்தில் இறுதிவரை பிலிப்பீன்ஸ் போராடியும் அக்குழுவால் ஆட்டத்தை சம நிலைப்படுத்தக்கூட முடியாமல் போனது. இங்கிலாந்து தேசிய காற் பந்துக் குழுவின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான எரிக்சன், பிலிப்பீன்ஸ் காற்பந்துக் குழுவை நிர்வகிக்க ஐந்து மாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். அவரது தலைமையிலான முதல் நான்கு ஆட்டங்களில் பிலிப்பீன்ஸ் குழு இரு ஆட்டங்களை வென்று மற்ற இரு ஆட்டங்களில் சமநிலை கண்டது. அரையிறுதிச் சுற்றின் இரண் டாம் ஆட்டத்தில் இரு குழுக்களும் வியட்னாமின் ஹனோய் நகரில் நாளை மறுதினம் பொருதவுள்ளன.

தமது குழுவிற்காக கோல் அடித்த உற்சாகத்தில் காணப்படும் வியட்னாமின் நுவென் ஆன் டுக். படம்: ஃபேஸ்புக்/ஏஎஃப்எஃப் சுசுகி கிண்ணம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மான்செஸ்டர் சிட்டியின் ஆறாவது கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங் (இடது). ஏற்கெனவே ஐந்து கோல்களை விட்டு விரக்தியுடன் இருந்த வாட்ஃபர்ட் கோல்காப்பாளர் சிட்டியின் இந்த கோல் முயற்சியையாவது தடுக்க பாய்ந்தார். ஆனால் அவரது இந்த முயற்சியும் தோல்வியில் முடிய ஸ்டெர்லிங் தமது ‘ஹாட்ரிக்’கை நிறைவுசெய்தார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

வாட்ஃபர்ட்டை ஊதித் தள்ளிய மேன்சிட்டி