பிஎஸ்எல்இ மதிப்பீட்டு முறையில் மாற்றம்

தொடக்கப் பள்ளி இறுதியாண்டு தேர்வு முடிவுகளில் 'டி-ஸ்கோர்' எனப்படும் மொத்த மதிப்பெண் முறை மாற்றப்படுகிறது. அதற்குப் பதிலாக, இப்போது பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலை ('ஓ' நிலை), மேல்நிலை ('ஏ' நிலை) போன்ற தேர்வுகளில் இருப்பதைப் போல பல்வேறு தரநிலைகள் நடப்பிற்கு வரவுள்ளன. இவ்வாண்டு தொடக்கநிலை முதல் வகுப்பில் பயிலும் மாண வர்கள் இந்தப் புதிய மதிப்பீட்டு முறைக்கு மாறுவர்.

அதாவது, வரும் 2021ஆம் ஆண்டில் அவர்கள் பிஎஸ்எல்இ தேர்வு எழுதும்போது இந்தப் புதிய மதிப்பீட்டு முறை தொடக்கப் பள்ளிகளில் முழுமையாக அமலுக்கு வந்திருக்கும். தற்காலிக கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங் நேற்று நாடாளுமன்ற விவாதத்தின்போது இவ்விவரங்களை வெளியிட்டார். இப்போது இருப்பதைப் போல சக மாணவர்களை ஒப்புநோக்கும் வகையில் பிஎஸ்எல்இ மதிப்பீட்டு முறை இனி இருக்காது என்ற அமைச்சர் இங், இது சக மாணவர்களைவிட சிறப்பாகச் செய்ய வேண்டும் என்றில்லாமல் தங் களது சொந்த கற்றல்முறையில் அதிக கவனம் செலுத்த மாணவர்களை ஊக்குவிப்பதாக அமையும் என்று நம்புவதாகச் சொன்னார்.

"பிஎஸ்எல்இ மிக முக்கியமான தேர்வு என்ற மனநிலை நம்மிடம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. 12 வயதில் மாணவர் ஒருவர் பிஎஸ்எல்இ தேர்வில் பெறும் மதிப் பெண்களே அவரது வெற்றியை, வாழ்க்கைப்பாதையைத் தீர்மானிக்கும் என்று பலரும் கருதுகின் றனர். இப்போதைய பிஎஸ்எல்இ தேர்வு மதிப்பீட்டு முறை மிகவும் துல்லியமாக இருக்கிறது. தேவையைவிட மிகவும் அதிகமாக நமது மாணவர்களை வேறுபடுத் திக் காட்டுவதாக இருக்கிறது. அதனால், குறிப்பாக இந்த இளம் வயதில், இத்தகைய அர்த்தமற்ற வேறுபாடுகளை நாம் களைய வேண்டும்," என்று திரு இங் கூறினார்.

கல்வி அமைச்சு அடுத்த சில ஆண்டுகளில் இந்தப் புதிய தேர்வு முறையையும் உயர்நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கை முறை யையும் உருவாக்கி, சோதித்துப் பார்க்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் இது பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகும்.

பிஎஸ்எல்இ மறுஆய்வு பற்றி கடந்த 2013ல் பிரதமர் லீ சியன் லூங் முதன்முதலாக அறிவித்தார். தேர்வு முடிவுகளுக்கு அளிக்கப் படும் அதீத முக்கியத்துவத்தைக் குறைத்து, மாணவர்கள் தங்களை முழுமையாக வளர்த்துக்கொள்ள அதிக நேரத்தையும் வாய்ப்பு களையும் வழங்குவதே இதன் நோக்கம். இந்த நிலையில், முழுமையான கல்வியை நோக்கிய முன்னுதாரண மாற்றத்தின் தேவையை திரு இங் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், நேரடிப் பள்ளி மாணவர் சேர்க்கைத் திட்டத்தையும் கல்வி அமைச்சு மறுஆய்வு செய்யும் என்று அமைச்சர் இங் குறிப்பிட்டார்.2016-04-09 06:00:32 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!