பிரதமர் லீ: அடுத்த ஆண்டில் இன்னும் அதிக குழந்தைகள் வேண்டும்

டெக் கீ சமூக மன்ற வளாகம் நேற்று கேளிக்கை விளை யாட்டுகள், குழந்தைகள் அழுகுரல்கள் என்று பரபரப்பாக காணப்பட்டது. அங்கு நடைபெற்ற ஆரோக்கிய குழந்தைக் காட்சியில் அத்தொகுதியில் வாழும் குடும்பங்கள் கலந்து கொண்டன. மொத்தம் 145 குழந்தைகள் போட்டியில் பங்கேற்றன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட இருமடங்கு. இதனால், உற்சாகமடைந்த அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பிரதமர் லீ சியன் லூங், "அடுத்த ஆண்டு நடைபெறும் குழந்தைக் காட்சியில் இன்னும் அதிக புதிய குழந்தைகளைக் காண விரும்புகிறேன்," என்றார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைச் சுற்றிப் பார்க்கையில் சில கர்ப்பிணிப் பெண்களைப் பார்த்த திரு லீ, குடியிருப்பாளர் களை இன்னும் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளு மாறு ஊக்கப்படுத்தினார். பிள்ளைகளைக் கொண்ட குடும் பங்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் இவ்வாண்டு பட்ஜெட்டில் சில உதவித் திட்டங்களை அறிவித்துள்ளது என்றார். "நாட்டின் பொன்விழா ஆண்டான 2015ல் அதிக குழந் தைகள் இங்கு பிறந்தன. இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்த இத்தொகுதியில் உள்ள பெற்றோர்களைக் கேட்டுக் கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.

தமது டெக் கீ தொகுதியில் நேற்று நடைபெற்ற கேளிக்கை விழாவில் பிரதமர் லீ சியன் லூங் (நடுவில்) சிறு பிள்ளை களுடன் அவர்களுக்கான விளையாட்டில் பங்கேற்கிறார். படம்: சாவ் பாவ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!