தங்கம் வென்றார் சாந்தி 78வது சிங்கப்பூர் பொது விருது

திடல்தடப் போட்டியில் பெண் களுக்கான 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சிங்கப்பூரின் சாந்தி பெரேரா தங்கம் வென்றுள்ளார். நேற்று நடைபெற்ற இந்தப் பந்தயத்தை முடிக்க அவர் எடுத்துக்கொண்ட நேரம் 24.04 வினாடிகள். இதற்கு முன் இந்தப் பிரிவில் சாந்தி பதிவு செய்திருந்த தேசிய சாதனை நேரம் 23.60 வினாடிகள் ஆகும். நேற்று நடைபெற்ற பந்தயத்தை முடிக்க இந்த நேரத்தைவிட அதிகமாக எடுத்துக்கொண்ட போதிலும் தங்கம் வெல்ல அது போதுமானதாகவே இருந்தது. இந்தப் பந்தயத்தில் மலேசியா வைச் சேர்ந்த ஸைடாத்துல் ஸுல்கிஃப்லி இரண்டாம் நிலை யிலும் வியட்னாமைச் சேர்ந்த ஙுவேன் தி ஒன் மூன்றாவது இடத்திலும் வந்தனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற மலேசியாவின் கோமளம் செல்வ ரத்னம் நான்காவது இடத்தைப் பிடித்தார். சிங்கப்பூரின் மற்றொரு வீராங்கனையான குகபிரியா சந்திரன் ஏழாவது இடத்தில் வந்தார். கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற தென்கிழக்காசியப் போட்டிக்கான மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் சாந்தி வாகை சூடி தங்கப் பதக்கத்தைத் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற போட்டி யாளர் களைப் பின்னுக்குத் தள்ளி மின்னல் வேகத்தில் பந்தயத்தை முடித்து தங்கம் வென்ற சாந்தி பெரேரா (நடுவில்). படம்: தி நியூ பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!