பதவியேற்றதும் மக்கள் பணி தொடக்கம்

நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் பிற்பகல் 1.30 மணிக்கு புக்கிட் பாத்தோக் தொகுதியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற திரு முரளிதரன் பிள்ளை அன்று இரவே தமது மக்கள் பணியைத் தொடங்கி விட்டார். மக்கள் செயல் கட்சியின் புக்கிட் பாத்தோக் கிளையில் நாடா ளுமன்ற உறுப்பினர் என்ற முறை யில் தமது முதலாவது மக்கள் சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார் 48 வயது திரு முரளி. அவரது வருகைக்காக திங்கட் கிழமை இரவு 8 மணிக்குள் சுமார் 80 குடியிருப்பாளர்கள் காத் திருந்தனர். அவர் அங்கு வந்து சேர்ந்ததும் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இருந்த கொண்டாட்ட உணர்வு நேற்று முன்தினம் மீண்டும் தலைதூக்கி யது.

அவரைக் கண்டதும் அங்கு வசிக்கும் முதிய குடியிருப்பாளர் ஒருவர், "வாருங்கள் எனது 16 ஆண்டு தோழரே," என்று கூறி அவரை வரவேற்றார். இதற்கு முன் புக்கிட் பாத்தோக் தொகுதியில் 16 ஆண்டு காலமாக அடித்தளத் தலைவராக திரு முரளி சேவையாற்றி இருந்ததை அது குறிக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினராக திரு முரளி பதவியேற்றதை நேரடியாகப் பார்க்க நாடாளுமன்றத்துக்கு வந்திருந்த அவரது துணைவியார் திருமதி கௌரி (வலக்கோடி) அவரது பிள்ளைகள் ஆகியோருடன் பிரதமர் லீ சியன் லூங் உரையாடுகிறார். திரு முரளிக்கு ஆதரவு தெரிவிக்க புக்கிட் பாத்தோக் அடித்தளத் தலைவர்கள் சுமார் 40 பேரும் நாடாளுமன்றத்தின் வருகையாளர் கூடத்தில் அமர்ந்திருந்தனர். படம்: பிரதமர் லீ ஃபேஸ்புக் பக்கம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!