நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய முப்பரிமாண அச்சு நிலையம்

துல்லியப் பொறியியலுக்கும் உற்பத்தித் துறைக்கான தொழில்நுட்பங்களுக்கும் ஆய்வுகளை நடத்தவும் புத்தாக்கத்தை மேம்படுத்தவும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்டியு) 42 மில்லியன் வெள்ளி செலவில் புதிய முப்பரிமாண அச்சு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்துக்கு தேசிய ஆய்வு அறநிறுவனம் நிதி வழங்கியது. வர்த்தகத் தொழில் அமைச்சர் (தொழில்) எஸ். ஈஸ்வரன் புதிய நிலையத்தை நேற்று திறந்து வைத்தார். முப்பரிமாண அச்சு தொடர்பாக ஆய்வுகள் நடத்தி புதிய தொழில் தரத்தை மையம் பரிந்துரை செய்யும். தொழிற்துறை, பல்வேறு அரசு அமைப்புகள் ஆகியவற்றிடமிருந்து புதிய மையம் கூடுதலாக 41 மில்லியன் வெள்ளி பெற்றுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!