தர்மன்: வேலையின்மைச் சூழலைத் தவிர்க்கலாம்

சிங்கப்­பூ­ரர்­களுக்கு மேம்பட்ட வேலைகளை உரு­வாக்­கு­வதற்கு, தொழில்­நுட்­பத்­துக்­கேற்ப சிங்கப்­பூர் விரைந்து செயல்­படு­வ­து­டன் தொழில்­நுட்­பத்தை­யும் பயன்­படுத்­திக்­கொள்ள வேண்டும் என துணைப் பிர­த­மர் தர்மன் சண்­மு­க­ரத்­னம் கூறி­யுள்­ளார். வளர்ச்சி அடைந்த நாடு­களில் இன்னும் 10 முதல் 20 ஆண்­டு­களில், உரு­வாக்­கப்­பட்ட வேலை ­களை­விட அதி­க­மாக வேலை இழப்­பு­கள் ஏற்பட்டு வேலை­யின்மைப் பிரச்­சினை அதி­க­ரிக்­கும் என்ற பயம் நிலவி வரு­வ­தாக புகுமுக வகுப்பு மாணவர்கள் 550 பேருக்கிடையே உரை­யாற்­றி­ய­போது துணைப் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

பொரு­ளி­யல், சமு­தா­யக் கொள்கை­களுக்­கான ஒருங்­கிணைப்பு அமைச்­ச­ரு­மான திரு தர்மன், “சிறிய சமு­தா­யத்தை­யும் அனைத்­து­லகச் சந்தையை­யும் கொண்­டி­ருப்­ப­தால் நாம் அந்தச் சூழலைத் தவிர்க்க முடியும். தொழில்­நுட்­பத்­துக்கு ஏற்ப விரைந்து செயல்­படு­வ­து­டன் அந்தத் தொழில்­நுட்­பத்தை­யும் பயன்­படுத்­திக்­கொண்டு ஒவ்­ வொ­ரு­வ­ருக்­கும் மேம்பட்ட வேலைகளை உரு­வாக்­கிக் கொள்வதை உறு­திப்­படுத்­து­வதன் மூலம் அந்தச் சூழல் வரு­வதற்கு முன்­பா­கவே தவிர்க்­க­லாம்,” என்று குறிப்­பிட்­டார். ஒவ்வொரு வேலை­யி­லும் மனி­தர்­களின் செயல்­தி­றன்களை விரி­வு­படுத்­து­வதை­யும் திருப்­தி ­ய­ளிக்­கும் விதத்­தி­லான வேலை களை உரு­வாக்­கு­வதையும் குறிப்­பிட்டு, “தொழில்­நுட்­பம் நம்மைப் பயன்­படுத்­து­வதற்­குப் பதிலாக நாம் தொழில்­நுட்­பத்தைப் பயன்­படுத்த வேண்டிய தேவை இருக்­கிறது,” என்றும் அவர் சொன்னார்.

இளமைப் பருவத்தில் இயன்றவரை அனைத்தையும் கற்பதை வலியுறுத்தும் சிங்கப்பூரின் தற்போதைய கல்வித் திட்டம் 2035ஆம் ஆண்டுவாக்கில் காலாவதியாகிப் போகும் என்று புகுமுக வகுப்பு மாணவர்களுக்கான கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களிடையே பேசிய துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் (கையில் கோப்பையுடன்) கூறினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இவ்வாண்டின் தமிழ்மொழி விழா தொடக்க நிகழ்ச்சி மீடியகார்ப் வளாக எம்இஎஸ் அரங்கத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. (முதல் வரிசையில் வலமிருந்து) வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் சு மனோகரன், தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் துணைத் தலைவர் டாக்டர் சந்துரு, வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் ஆர் ராஜாராம், அமைச்சர் எஸ் ஈஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விக்ரம் நாயர், முரளிதரன் பிள்ளை, மீடியகார்ப் தலைமை நிர்வாக அதிகாரி தாம் லோக் கெங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.  படம்: தமிழ் முரசு

25 Mar 2019

அரசு உறுதி: தமிழ் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாகத் தொடரும்