இயற்கைச் சூழலில் புதிய செம்பவாங் மையம்

செம்ப­வாங்­கின் இயற்கைச் சூ­ழலை ஒன்­றிணைத்து உரு­வா­கிறது புதிய செம்பவாங் ஒருங்­கிணைக்­கப்­பட்ட விளை­யாட்டு, சமூக மையம். செம்பவாங் எம்­ஆர்டி நிலையம் அருகே 12 ஹெக்டர் பரப்­ப­ள­வில் அமை­ய­வுள்ள இந்த மையம், இயற்கைச் சூழலுடன் கூடிய நீச்சல் குளம் முதல் காட்டு நடை­பாதை­கள், சுற்­றுச்­சூ­ழலைப் பாது ­காக்­கும் வகையில் நீர் சேமிப்பு கரு­வி­கள், மின்­சக்தி சேமிப்பு விளக்­கு­களு­டன் கூடிய உண­வங் கா­டி­கள் போன்ற பல வச­தி­களைக் கொண்­டி­ருக்­கும்.

நீர் நிலை, விளை­யாட்டு, உடல் ஆரோக்­கி­யம் போன்ற­வற்றை மையப்­படுத்தி உரு­வாக்­கப்­படும் இந்த மையத்­தில் பல்­நோக்கு விளை­யாட்டு இடங்கள், சமூகத் தோட்­டங்கள் போன்றவை­யும் இடம்­பெ­ற­வுள்­ளன. செம்ப­வாங் எம்­ஆர்டி நிலையம் அருகே நேற்று நடை­பெற்ற சாலைக்­காட்­சி­யில் போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ரும் செம்ப­வாங் குழுத்­தொ­குதி நாட­ளு­மன்ற உறுப்­பி­ன ­ரு­மான திரு கோ பூன் வான் புதிய மையம் குறித்து மக்­களி­டம் விளக்­கினார்.

பகல் நேர பரா­ம­ரிப்பு சேவை, இயன்மருத்துவ சேவை போன்ற சேவை­களை­யும் வழங்­கும் முதி யோர் பரா­ம­ரிப்பு நிலை­ய­மும் இந்த மையத்­தில் அமை­ய­வுள்­ளது. "செம்ப­வாங் வட்­டா­ரத்­தின் இயற்கைச் சூழலை­யும் மர­புடைமை யை­யும் ஒருங்­கிணைத்து புதிய மையம் அமைக்­கப்­படு­வது முக்­கி­யம்," எனக் கூறினார் தற்­கா­லி­கக் கல்வி அமைச்­ச­ரும் செம்ப­வாங் குழுத்­தொ­குதி நாட­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு ஒங் யீ காங்.

செம்பாவாங்கில் புதிய ஒருங்கிணைக்கப்பட்ட விளையாட்டு, சமூக மையம் அமையவுள்ள பகுதிக்கு நேற்று செம்பவாங் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மையத்தின் உருவாக்கத்தில் பங்கெடுத்துள்ள மற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் வருகையளித்தனர். இடமிருந்து தேசிய பூங்கா கழகத்தின் தலைவர் திரு கென்னத் எர், செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லிம் வீ கியாக், போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!